வாரிசு படத்தின் வசூல் சாதனையை முறியடித்து... பாக்ஸ் ஆபிஸில் தளபதிக்கே தண்ணிகாட்டிய ‘மாவீரன்’ சிவகார்த்திகேயன்
விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை மாவீரன் திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
maaveeran
பிரின்ஸ் படத்தின் மூலம் படுதோல்வியை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தரமான கம்பேக் திரைப்படமாக வந்திருக்கிறது மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படம் ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வெளியானது முதல் சக்கைப் போடு போட்டு வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.11 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இதில் தமிழக வசூல் மட்டும் ரூ.7.61 கோடி ஆகும்.
இந்த ஆண்டு வெளியான படங்களில் துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வனுக்கு அடுத்தபடியாக முதல் நாளில் அதிக கலெக்ஷன் அள்ளிய படம் என்கிற சாதனையை இதன்மூலம் நிகழ்த்தியது மாவீரன். இதையடுத்து இரண்டாம் நாளில் இருந்து பேமிலி ஆடியன்ஸின் வருகையால் இப்படத்தின் வசூலும் பிக் அப் ஆக ஆரம்பித்தது. அதன்படி இரண்டாம் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9.34 கோடி வசூலித்த இப்படம், மூன்றாம் நாளில் ரூ.10.57 கோடி வசூலித்து தமிழகத்தில் மட்டும் மூன்றே நாட்களில் ரூ.27.52 கோடி வசூலித்து மாஸ் காட்டியது.
இதையும் படியுங்கள்... புயலுக்கு முன்னாடி வர இடி எப்படி இருக்கும் தெரியுமா?.. ஒரு போஸ்டர் போட்டு மிரட்டி விட்ட "ஜவான்" ஷாருக்!
தற்போது வரை உலகளவில் ரூ.50 கோடி வசூலை நெருங்கி வரும் இப்படம், விஜய்யின் வாரிசு பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. விஜய்யின் வாரிசு படம் இரண்டாம் நாளில் அமெரிக்காவில் ரூ.4 கோடி வசூலித்து இருந்தது. ஆனால் மாவீரன் திரைப்படம் இரண்டாம் நாளில் மட்டும் அதைவிட ரூ.1 கோடி கூடுதலாக வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.
அதேபோல் தமிழகத்திலும் வாரிசு படம் ரிலீஸ் ஆன இரண்டாவது நாளில் ரூ.8.75 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் மாவீரன் படம் இரண்டாம் நாளில் ரூ.9.34 கோடி வசூலித்து தமிழக பாக்ஸ் ஆபிஸிலும் விஜய்யை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. விஜய் போன்ற முன்னணி நடிகரின் படத்தை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு சிவகார்த்திகேயன் அசுர வளர்ச்சி கண்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா.. தமிழ் மொழிக்கு தந்த முத்தான மூன்று "R" நடிகைகள் - ஒரு பார்வை!