உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா.. தமிழ் மொழிக்கு தந்த முத்தான மூன்று "R" நடிகைகள் - ஒரு பார்வை!
இயக்குனர் பாரதிராஜா இன்று தனது 81வது வயதை நிறைவு செய்து 82ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார். சரி சற்று காலத்தில் பின்னோக்கி செல்வோம், அப்போது ஆண்டு 1977, பல நடிகர்கள் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. தமிழ் சினிமாவும் பல புதிய கலாச்சாரங்களை ஏற்றுக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்த நேரமது.
அப்படிபட்ட ஒரு நேரத்தில் தான், மீண்டும் தமிழ் சினிமாவை அ(தன்) கிராமத்து மண் வாசனைக்கு மெல்ல நாகரத்தினர் ஒரு இயக்குனர். தமிழ் சினிமாவின் அப்போதைய சூப்பர் ஸ்டாரான கமல்ஹாசனை அதுவரை யாரும் கண்டிராத ஒரு கதாபாத்திரத்தில் களமிறக்கி, தானும் இயக்குனராக களமிறங்கினர் அந்த அல்லிநகரத்து அற்புத மனிதன் பாரதிராஜா.
இதுவரை இவர் கதை எழுதி, இயக்கி படங்கள் 11 தான் என்றபோது இவருக்கு கிடைத்துள்ள தேசிய விருதுகளின் எண்ணிக்கையோ 6. சரி தற்போது இந்த பதிவின் கருவிற்கு வருவோம், பாரதி ராஜா அந்த காலகட்டத்திலேயே, கதையை மட்டும் நம்பி பல புது முகங்களை அறிமுகம் செய்தவர்.
அந்த வகையில் கடந்த 1978ம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் ராதிகா அறிமுகமானார். அன்று துவங்கி இன்று வரை சுமார் 45 ஆண்டுகளாக பலநூறு படங்களில் நடித்துக்கொண்டு வருகின்றார் அவர். எந்தொரு மேடையில் ஏறினாலும் தனது குருநாதர் பாரதிராஜாவை பற்றி இவர் பேசாத நாளில்லை.
அவர் அறிமுகம் செய்யும் சில நடிகர் நடிகைகளுக்கு R என்று துவங்கும்படி பெயர் வைத்து அறிமுக செய்தவர் பாரதி ராஜா. அந்த வகையில் 1981ம் ஆண்டு அவருடைய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் தான் அறிமுகமானார் உதய சந்திரிகா என்ற ராதிகா. அந்த படம் மூலம் அறிமுகமானார் தான் நவரச நாயகன் கார்த்தியும். ராதாவும், கார்த்தியும் பிற்காலத்தில் எவ்வளவு பெரிய நட்சத்திரங்களாக மின்னினார்கள் என்பது நாம் அறிந்ததே.
அடுத்தபடியாக இவர் அறிமுகம் செய்துவைத்த ஒரு நடிகை தான், ஆஷா கேலுன்னி நாயர் என்ற ரேவதி. 1983ம் ஆண்டு வெளியான அவருடைய மண் வாசனை என்ற படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். ரேவதி ஒரு ரேவலூஷன் நாயகியாக தமிழ் சினிமாவில் வலம்வந்தார். இன்றளவும் பல நல்ல திரைப்படங்களில் தொடற்சியாக நடித்தும் வருகின்றார்.
விஜய் சேதுபதி ஜோடியாக கத்ரீனா கைப் நடித்த ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு