புயலுக்கு முன்னாடி வர இடி எப்படி இருக்கும் தெரியுமா?.. ஒரு போஸ்டர் போட்டு மிரட்டி விட்ட "ஜவான்" ஷாருக்!

இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் பக்கம் நின்று சண்டை போடும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் நயன்தாரா.

Shah Rukh Khan Released a poster of actress nayanthara from jawan movie viral on internet

கோலிவுட் மற்றும் பாலிவுட் என்று இரு திரையுலக ரசிகர்களையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது அட்லியின் ஜவான் திரைப்படம். முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் பிளாக்பஸ்டர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. 

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான ஒரு சிறிய preview காட்சி ஷாருகானின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் தீபிகா படுகோனே நடிக்க, முக்கியமான வேடங்களில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, முன்னணி நடிகை பிரியாமணி, பாலிவுட் நடிகை சானியா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் பக்கம் நின்று சண்டை போடும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் நயன்தாரா. மேலும் இந்த படத்திற்காக சிறப்பு பயிற்சிகள் மேற்கொண்டு பல ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளிலும் நயன்தாரா இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் புயலுக்கு முன் வருகின்ற இடி இவளை போலத்தான் பயங்கரமாக இருக்கும் என்று கூறி சாருக் கான் ஜவான் படத்தில் இருந்து நயன்தாராவின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு நெகடிவ் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். 

அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஷாரூக்கானுக்காகத் தான் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவருடன் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். சம்பளமே தரமாட்டேன் என்று கூறியிருந்தாலும் இந்த படத்தில் நிச்சயம் நான் நடித்திருப்பேன் என்று அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.   

நடிகை நயன்தாரா இத்தனை படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளாரா?... என்ன லிஸ்ட்டு பெருசா போகுது..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios