MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகை நயன்தாரா இத்தனை படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளாரா?... என்ன லிஸ்ட்டு பெருசா போகுது..!

நடிகை நயன்தாரா இத்தனை படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளாரா?... என்ன லிஸ்ட்டு பெருசா போகுது..!

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, ஐட்டம் டான்ஸ் ஆடிய படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 17 2023, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Nayanthara

Nayanthara

மலையாள நடிகையான நயன்தாரா புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது தமிழ் சினிமா தான். தமிழ் திரையுலகில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ள நயன்தாரா, தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். இதுவரை தென்னிந்திய மொழி படங்களில் நடித்துவந்த நயன்தாரா தற்போது ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையில், அவர் ஐட்டம் டான்ஸ் ஆடிய படங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

25
சிவகாசி

சிவகாசி

நடிகை நயன்தாரா முதன்முதலில் ஐட்டம் டான்ஸ் ஆடியது சிவகாசி படத்தில் தான். பேரரசு இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்த இப்படத்தில் கோடம்பாக்கம் ஏரியா என்கிற பாடலுக்கு நடிகர் விஜய் உடன் சேர்ந்து செம்ம குத்தாட்டம் போட்டிருப்பார் நயன். அப்பாடல் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனதற்கு நயனின் நடனமும் முக்கிய காரணம்.

இதையும் படியுங்கள்... மஞ்சள் வீரன் ஹீரோயின் அப்டேட்... முதல் படத்திலேயே டிடிஎப் வாசன் உடன் ரொமான்ஸ் பண்ணப்போகும் நடிகை இவரா?

35
சிவாஜி தி பாஸ்

சிவாஜி தி பாஸ்

ரஜினியுடன் சந்திரமுகி என்கிற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டு, அவரின் அடுத்த படமான சிவாஜி தி பாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆடி அதிர்ச்சி கொடுத்தார் நயன். அதன்படி ஷங்கர் இயக்கிய அந்த பிரம்மாண்ட படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா பாடலில் நயனின் கவர்ச்சி நடனம் பிளஸ் ஆக அமைந்தது.

45
டுவெண்டி 20

டுவெண்டி 20

மலையாளத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான திரைப்படம் டுவெண்டி 20. உதய் கிருஷ்ணா இயக்கியிருந்த இப்படத்தில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம், திலீப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தில் ஹே தில் தீவானா என்கிற பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடி இருந்தார் நடிகை நயன்தாரா.

55
எதிர்நீச்சல்

எதிர்நீச்சல்

நடிகை நயன்தாரா கடைசியாக ஐட்டம் டான்ஸ் ஆடிய திரைப்படம் என்றால் அது எதிர்நீச்சல். துரைசெந்தில் குமார் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார். இதில் லோக்கல் பாய்ஸ் என்கிற குத்துப்பாடலில் தனுஷும், சிவகார்த்திகேயனும் செம்ம குத்தாட்டம் ஆடி இருப்பர். அப்பாடலில் இறுதியில் நடிகை நயன்தாரா வந்து செம்ம குத்து டான்ஸ் ஆடி இருப்பார். இப்பாடலும் வேறலெவல் ஹிட் அடித்தது.

இதையும் படியுங்கள்... இவர் தான் இலியானாவின் காதலரா? ஒருவழியா குழந்தை பிறக்கும் முன் கர்ப்பத்திற்கு காரணமானவர் முகத்தை காட்டிய நடிகை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அந்நியனாக இருந்த தம்பிகளை ரெமோவாக மாற்றிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
சொந்த கதை இல்லை, ஆனாலும் செம ஹிட்! டி.ஆரின் 'ஒன் அண்ட் ஒன்லி' ரீமேக் படம் எது தெரியுமா?!
Recommended image3
ரஜினிக்கு தேவா செதுக்கிய இசை சிம்மாசனம்! ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்த சூப்பர் ஸ்டாரின் 'மாஸ்' இன்ட்ரோ பாடல்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved