MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன மாரீசன்... வடிவேலு - பகத் பாசில் கூட்டணிக்கு பாக்ஸ் ஆபிஸில் செம அடி!

முதல் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன மாரீசன்... வடிவேலு - பகத் பாசில் கூட்டணிக்கு பாக்ஸ் ஆபிஸில் செம அடி!

வடிவேலு - பகத் பாசில் கூட்டணியில் வெளியாகி உள்ள மாரீசன் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 26 2025, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maareesan Day 1 Box Office collection
Image Credit : X

Maareesan Day 1 Box Office collection

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலுவும், பகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் மாரீசன். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவானதற்கு காரணமே வடிவேலு - பகத் பாசில் கூட்டணி தான். ஏனெனில் இதற்கு முன்னர் அவர்கள் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன் வெற்றிக்கு பின் இருவரும் இணைந்து நடித்திருப்பதால் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் எப்படி இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பும் எகிற ஆரம்பித்தது. இந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைக்கும் அளவுக்கு இப்படத்தின் டிரெய்லரும் அமைந்திருந்தது.

24
மாரீசன் கதை என்ன?
Image Credit : Twitter

மாரீசன் கதை என்ன?

மாரீசன் திரைப்படத்தில் வடிவேலு வேலாயுதம் என்கிற கேரக்டரிலும், பகத் பாசில் தயா என்கிற ரோலிலும் நடித்துள்ளனர். கதைப்படி வடிவேலு மறதி நோய் உள்ளவர். ஒருநாள் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும்போது பின்-ஐ மறந்துவிடுகிறார். திருடனான பகத் பாசில் அப்போது அங்கு வந்து வடிவேலுவிடம் அதிக பணம் இருப்பதை அறிந்ததும், அதை எப்படியாவது அபேஸ் செய்ய முடிவெடுத்து அவரை பைக்கில் அழைத்து செல்கிறார். இந்த பயணத்தின் போது என்ன ஆனது? வடிவேலுவிடம் இருந்து பகத் பாசில் பணத்தை திருடினாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை.

Related Articles

Related image1
புரமோஷன் செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் பகத் பாசில் - வடிவேலு; பேச்சு மூச்சின்றி கிடக்கும் மாரீசன்!
Related image2
மாரீசன் விமர்சனம் : வடிவேலு - பகத் பாசில் கூட்டணி கலக்கியதா? சொதப்பியதா?
34
மாரீசன் படத்தின் வரவேற்பு எப்படி?
Image Credit : facebook

மாரீசன் படத்தின் வரவேற்பு எப்படி?

படத்தின் கதை சூப்பராக இருந்தாலும் அதை எடுத்த விதத்தில் கோட்டை விட்டுள்ளனர். இதனால் மாரீசன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு போதுமான புரமோஷன் செய்யாததும் அதன் சுமார் வரவேற்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதற்கு போட்டியாக வெளிவந்த தலைவன் தலைவி படக்குழு செய்த புரமோஷனில் 10 சதவீதம் கூட மாரீசன் படத்திற்கு செய்யப்படவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் செம அடி வாங்கி உள்ளது மாரீசன் திரைப்படம். அப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

44
மாரீசன் முதல் நாள் வசூல் எவ்வளவு?
Image Credit : X

மாரீசன் முதல் நாள் வசூல் எவ்வளவு?

மாரீசன் திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் வெறும் ரூ.75 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. பகத் பாசில் - வடிவேலு என இரு திறமைவாய்ந்த நடிகர்கள் நடித்திருந்தும் இப்படம் எடுபடவில்லை. இதற்கு போட்டியாக வெளிவந்த தலைவன் தலைவி திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.4.15 கோடி வசூலித்திருக்கிறது. அதில் பாதி வசூல் கூட மாரீசன் படத்திற்கு கிடைக்கவில்லை. இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் மாரீசன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வடிவேலு
சினிமா
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Recommended image2
Singappenne : மாமியாரை வழிக்கு கொண்டுவர ஆனந்தி எடுக்கும் முடிவு! துளசியின் சூழ்ச்சி அம்பலமாகுமா? சித்ரவதை செய்யும் லலிதா!
Recommended image3
விஜய் - ராஷ்மிகா திருமண நகைகளின் விலை இத்தனை கோடியா? 3 சொகுசு வில்லாக்களே வாங்கலாம்! மிரள வைக்கும் பின்னணி!
Related Stories
Recommended image1
புரமோஷன் செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் பகத் பாசில் - வடிவேலு; பேச்சு மூச்சின்றி கிடக்கும் மாரீசன்!
Recommended image2
மாரீசன் விமர்சனம் : வடிவேலு - பகத் பாசில் கூட்டணி கலக்கியதா? சொதப்பியதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved