திருமண அறிவிப்பை வெளியிட்ட கவின்... முன்னாள் காதலி லாஸ்லியாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
டாடா பட நாயகன் கவினுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கு அவரது முன்னாள் காதலியான லாஸ்லியா என்ன ரியாக்ட் செய்துள்ளார் என்பதை பார்க்கலாம்.
ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கவின். இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து நட்புனா என்னன்னு தெரியுமா என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கவினுக்கு அப்படம் பெரியளவில் கைகொடுக்கவில்லை. இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் கவின்.
கவினின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது கவினின் காதலும் பெரியளவில் பேசப்பட்டது. அந்த சமயத்தில் சக போட்டியாளரான லாஸ்லியாவை உருகி உருகி காதலித்தார் கவின். அங்கேயே திருமணம் செய்துகொள்வார்களோ என எண்ணும் அளவுக்கு இவர்களது காதல் சென்றுகொண்டிருந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இவர்களது காதலும் முடிவுக்கு வந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான விடை தற்போது தான் கிடைத்து இருக்கிறது. கவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே மோனிகா என்பவரை காதலித்து வந்துள்ளார். அவரை தான் தற்போது திருமணமும் செய்துகொள்ளப்போகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை மோனிகா பற்றி வாய்திறக்காத கவின், வெளியே வந்ததும் அதனை போட்டுடைத்திருப்பார் போல, அதனால் தான் லாஸ்லியா பிரேக் அப் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஹீரோயின்களை மிஞ்சும் அழகு..! பிக்பாஸ் கவினின் காதலி மோனிகா யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
கவினும், லாஸ்லியாவும் பிரேக் அப் செய்து பிரிந்த பின்னர் இருவருமே சினிமா செம்ம பிசியாகிவிட்டனர். கவின் ஒருபக்கம் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்க, லாஸ்லியாவுக்கும் அடுத்தடுத்து படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் கவின். அதன்படி வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி கவினுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அவர் தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை தான் கரம்பிடிக்க உள்ளாராம்.
இந்த செய்தி உலா வந்த அதே சமயத்தில் நடிகை லாஸ்லியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது போட்டோ ஒன்றை பதிவிட்டு, அதன் பின்னணியில் ஆயுத எழுத்து படத்தில் இடம்பெறும் ‘நெஞ்சமெல்லாம் காதல்’ என்கிற பாடலை ஒலிக்கவிட்டுள்ளார். அவர் கவினின் திருமணம் பற்றி தெரிந்து தான் இப்படி சூசகமாக ரியாக்ட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி லேட்டஸ்டாக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் லாஸ்லியா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், அதன் கமெண்ட் செக்ஷன் முழுவதும் கவினின் திருமணம் பற்றிய கமெண்ட்டுகள் தான் நிரம்பி வழிகின்றன. சிலர் கவினின் திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்க, ஒரு சிலரோ, கவினை மிஸ் பண்ணிவிட்டீர்களே என சொல்லி அவரை கடுப்பாக்கும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அட்ரா சக்க... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்! 'ஜெயிலர்' டிரைலர் ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு!