MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி 67 அப்டேட்டோட தான் திரும்பி வருவேன் - ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்

தளபதி 67 அப்டேட்டோட தான் திரும்பி வருவேன் - ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்

Lokesh kanagaraj : மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக நான்கு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 02 2022, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதையடுத்து இவர் இயக்கிய கைதி திரைப்படம், விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த அவருக்கு அடுத்தாக கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைத்து, வெற்றிகண்ட லோகேஷ், இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெற்றார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது குருவான கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்தார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தை சொன்னபடியே செம்ம மாஸாக எடுத்து வெற்றிவாகை சூடினார்.

35

இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் விக்ரம் படம் தான் வசூலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இப்படம் ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மீண்டும் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளார் லோகேஷ். இவர் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... என்னது ‘விக்கி’ பிரபுதேவா மாதிரி இருக்குறதுனால தான் நயன்தாரா லவ் பண்ணாங்களா! புது குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்

45

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்பட வில்லை. விரைவில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் லோகேஷ். அதன்படி, அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் தான் சிறிது இடைவேளை எடுத்துக்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த படத்தின் அறிவிப்போடு உங்களை வந்து மீண்டும் சந்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

55

அவர் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது இடைவேளை எடுத்திருப்பது, விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் தளபதி 67 பட அப்டேட்டுடன் தான் மீண்டும் வருவேன் என குறிப்பிட்டுள்ளது அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த மாதம் தளபதி 67 பட அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சிரஞ்சீவி, சல்மான் கான், பிரபுதேவா உடன் காட்பாதர்..மெகா பாடலை முடித்த படக்குழு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved