என்னது ‘விக்கி’ பிரபுதேவா மாதிரி இருக்குறதுனால தான் நயன்தாரா லவ் பண்ணாங்களா! புது குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்
விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே காதல் மலர்வதற்கு நான் தான் காரணம் என ‘நானும் ரவுடி தான்’ படத்தில் ராகுல் தாத்தா கேரக்டரில் நடித்த உதய பாணு கூறி உள்ளார்.
கோலிவுட்டில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது நானும் ரவுடி தான் படத்தில் தான். விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.
தனுஷ் தயாரித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இப்படத்தைப் போல் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் காதலும் சக்சஸ் ஆனது. இவர்களிடையே காதல் மலர்வதற்கு நான் தான் காராணம் என ‘நானும் ரவுடி தான்’ படத்தில் ராகுல் தாத்தா கேரக்டரில் நடித்த உதய பாணு கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது : “நானும் ரவுடி தான் படத்தின் நடித்தபோது விக்னேஷ் சிவனை அழைத்து, உன்னுடையை ஆக்டிவிட்டிலாம் பாக்கும் போது எனக்கு பிரபுதேவாவை பார்க்குற மாதிரியே இருக்குனு சொன்னேன். அதேபோல் நயன்தாராவிடமும், விக்கியை பார்க்கும்போது பிரபுதேவா மாஸ்டர் மாதிரியே இருக்கேமா அப்டினு சொன்னேன். அவர்களது காதலுக்கு மூலக்காரணமே நான் தான்” என கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்.... Non-linear-ல் நான் சீனியர்னு முதல்வரே பாராட்டிட்டாரு! இனி பார்... ப்ளூ சட்டையை மறைமுகமாக எச்சரித்த பார்த்திபன்
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து சினிமாவில் நடித்து வரும் உதய பாணு, நானும் ரவுடி தான் படத்தில் நடித்த பின்னர் தான் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அவர் இப்படத்தில் நடித்த ராகுல் தாத்தா கேரக்டர், இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்பின்னர் அவர் ரசிகர்களால் செல்லமாக ராகுல் தாத்தா என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் இடம்பெற்ற கோமாளிகளுடன் இவர் அடித்த லூட்டிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் கோமாளிகள் தன்னை கிண்டலடிக்கும் போது மனசு கஷ்டமாக இருந்தது என அந்த பேட்டியில் உருக்கமாக பேசி உள்ளார் ராகுல் தாத்தா.
இதையும் படியுங்கள்.... பொன்னியின் செல்வன் முதல் பாடலுக்கே இவ்வளவு வரவேற்பா?