- Home
- Cinema
- சூப்பர்ஸ்டார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை சல்லி சல்லியாய் நொறுக்கி முதலிடம் பிடித்த லோகா
சூப்பர்ஸ்டார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை சல்லி சல்லியாய் நொறுக்கி முதலிடம் பிடித்த லோகா
Lokah Movie Box Office : மலையாள திரையுலகில் அதிக வசூல் அள்ளிய திரைப்படம் என்கிற சாதனையை கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா சாப்டர் 1 : சந்திரா திரைப்படம் படைத்துள்ளது.

Lokah Break Empuraan Record
உலகளவில் அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற சாதனையை 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' படைத்துள்ளது. உலகளவில் 265 கோடி ரூபாய் வசூலித்த மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் 'எம்புரான்' படத்தின் சாதனையை 'லோகா' முறியடித்துள்ளது. இந்தத் தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் ஃபிலிம்ஸ் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளது. இந்திய சினிமாவில் ஹீரோயினை மையமாக வைத்து எடுத்த ஒரு படம் பெற்ற மிகப்பெரிய வசூல் சாதனையையும் 'லோகா' படைத்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த லோகா
அதே சமயம், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மலையாளத்தின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்ற பெருமையுடன் வெளியான 'லோகா', கள்ளியங்காட்டு நீலி என்ற புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. துல்கரின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரித்த ஏழாவது படமான 'லோகா - அத்தியாயம் 1: சந்திரா' பாக்ஸ் ஆபிஸில் வெற்றிநடை போடுகிறது. வெளியான 7 நாட்களில் 100 கோடி கிளப்பில் இப்படம் இணைந்தது. ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு சூப்பர் ஹீரோ சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படம் இதுவாகும்.
5 பாகங்களாக உருவாகும் லோகா
கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நஸ்லெனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பார்வையாளர்களுக்கு ஒரு மாயாஜால உலகத்தை காட்டும் இப்படம், கேரளாவின் புகழ்பெற்ற புராணக்கதையான கள்ளியங்காட்டு நீலியின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சாண்டி, சந்து சலீம்குமார், அருண் குரியன், சரத் சபா, நிஷாந்த் சாகர், விஜயராகவன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும், துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், சன்னி வெய்ன் ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் அடுத்த பாகம், டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சாத்தன்களின் கதையாக இருக்கும். 'லோகா' முதல் பாகம் சாத்தனின் அறிமுகத்துடன் முடிவடைகிறது.
நம்பர் 1 இடத்தில் லோகா
மலையாள திரையுலகில் அதிக வசூல் அள்ளிய படமாக கடந்த ஆண்டு வரை மஞ்சும்மல் பாய்ஸ் தான் இருந்து வந்தது. அது புலிமுருகன் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து இந்த ஆண்டு மோகன்லாலின் துடரும் மற்றும் எம்புரான் படங்கள் மஞ்சும்மல் பாய்ஸ் சாதனையை முறியடித்த நிலையில், தற்போது லோகா திரைப்படம் அந்த இரண்டு படங்களைவிட அதிக வசூலித்து கெத்தாக நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.