கொடி அறிமுகப்படுத்திய ஒரே நாளில் இத்தனையா? விஜய்யை விடாது கருப்பாய் துரத்தும் சர்ச்சைகள் ஒரு பார்வை
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்த ஒரே நாளில் நடிகர் விஜய் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி உள்ளார் அதைப்பற்றி பார்க்கலாம்.
Vijay
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுக விழா நேற்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் கொடியை அறிமுகம் செய்த கையோடு, அக்கட்சிப் பாடலையும் வெளியிட்டார். அதன்பின்னர் கட்சி அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார் விஜய். அந்த விழா நடந்ததோ ஒரு சில மணிநேரம் தான், ஆனால் அதன் பின் விஜய் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம் அதைப்பற்றி பார்க்கலாம்.
Vijay Car
அபராதம் செலுத்தாத கார்
கொடி அறிமுக விழாவிற்கு நடிகர் விஜய் இன்னோவா கிரிஸ்டா காரில் வந்திருந்தார். அவர் வந்த காருக்கு ரூ.4 ஆயிரத்து 500 அபராதத் தொகை நிலுவையில் உள்ளதாம். விதிமீறல்களில் சிக்கியதால் இவ்வளவு அபாராதத் தொகை வந்ததாகவும் அதை விஜய் இன்னும் கட்டாததும் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது.
BSP and TVK flag
கொடிக்கு எதிர்ப்பு
விஜய்யின் கட்சி கொடியில் தேர்தல் ஆணைய விதி மீறப்பட்டு இருப்பதாக தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் குற்றம்சாட்டியது. பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் யானை இடம்பெற்றிருக்கும் நிலையில், விஜய்யின் கட்சியின் யானை உடன் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியதால் அதை மாற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... விஜய் மீது தேச குற்ற புகார்.!! போலீசுக்கும் தூதரகத்திற்கும் பறந்த இமெயிலால் தவெக ஷாக்
vijay mother Shoba
தாயை தவிர்த்த மகன்
கொடி அறிமுக விழாவிற்கு விஜய்யின் பெற்றோர் ஷோபா மற்றும் எஸ்.ஏ.சி-யும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். முதலில் மேடையில் பேசும்போது தாய், தந்தைக்கு நன்றி சொல்ல மறந்த விஜய், இறுதியாக வந்து அதை தெரிவித்தார். அதன்பின்னர் நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது ஷோபா விஜய்யின் கையை பிடித்து பேச சென்றபோது விஜய் முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
Vijay Party Flag
பூவிலும் சர்ச்சை
விஜய் கட்சி கொடியில் இருக்கும் பூ, வாகை மர பூ என கூறப்பட்ட நிலையில், அது வாகை பூ அல்ல தூங்கு மூஞ்சி மரத்தின் பூ என்றும் இணையத்தில் ஒரு விவாதம் கிளம்பியது. வாகை மரத்தில் பச்சை மற்றும் வெள்ளைநிற பூக்கள் மட்டுமே வரும் என்றும் விஜய் கட்சி கொடியில் இருப்பது பிங்க் நிற பூ என்பதால் அது தூங்கு மூஞ்சி மர பூவாக தான் இருக்கும் என இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
vijay, Bussy Anand
ஸ்பெயின் நாட்டு கொடியா?
தமிழக வெற்றிக் கழகம் அறிமுகம் செய்துள்ள ஸ்பெயில் நாட்டு கொடி என்றும், அதை அவமானப்படுத்தும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தினர் இந்த கொடியை பயன்படுத்தி இருப்பதால் விஜய் மீது கமிஷனர் அலுவலத்தில் பரபரப்பு புகார் ஒன்றும் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ஆப்ரிக்க யானை.. ஸ்பெயின் நாட்டு டச் - De-Code செய்யப்பட்ட த.வெ.க கட்சியின் கொடி!