விஜய் மீது தேச குற்ற புகார்.!! போலீசுக்கும் தூதரகத்திற்கும் பறந்த இமெயிலால் தவெக ஷாக்
தமிழகத்தில் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ள நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி, கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார். இருப்பினும், கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம், பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்ப்பையும், சமூக வலைதளங்களில் கிண்டல்களையும் சந்தித்துள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த விஜய் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்டமாக செப்டம்பர் மாதம் தனது கட்சியின் அரசியல் மாநாட்டை நடத்தவுள்ளார். இதற்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும பாடல் அறிமுக விழா நேற்று நடைபெற்றது.
கொடியில் யானை சின்னம்
நடிகர் விஜய் அறிமுகப்படுத்திய கொடியில் அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள், வாகை மலர் ஆகியவை அக்கட்சி கொடியில் இடம்பெற்றுள்ளது. இந்த கொடி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே ஏற்கனவே கட்சியின் கொடியில் யானை சின்னத்தை வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் கூறியது.
இதனையடுத்து தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த கொடியில் வருகிற யானை பெவிகால் விளம்பரம் எனவும், கேரள அரசின் முத்திரை எனவும் படத்தோடு டிரோல் செய்து வருகின்றனர்.
கேரள அரசின் முத்திரையா.?
அடுத்ததாக நடிகர் விஜய்க்கு ஷாக் கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக்கழக கொடி மீதான நிறம் தொடர்பாக இந்திய குடியரசு தூதரகம், ஸ்பெயின் தூதரகம் மற்றும் காவல்நிலையத்திற்கு புகார் பறந்துள்ளது. சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் அளித்துள்ள புகாரில், தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் சட்டத்திற்கு புறம்பாக கேரளா மாநிலத்தின் போக்குவரத்து கழகத்தின் அரசு சின்னமான யானை சின்னம் இடம் பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் கொடியின் நிறமா.?
மேலும் வெள்ளாளர் சமூகத்தில் பயன்படுத்தி வரும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியின் நிறமும், ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியின் நிறமும், ஈழத் தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகை பூவின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிமுறையின்படி எந்த ஒரு கொடியிலும் கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து உயிருள்ள ஜீவன்களை மிருகம், பறவை, போன்ற பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் விதிமுறை உள்ளது.
தேச குற்ற வழக்கு
எனவே இதனை மீறிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மீது ஸ்பெயின் நாட்டை அவமானம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்ட நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஸ்பெயின் நாட்டின் தூதரக தலைவர் அவர்களுக்கும் , இந்தியன் தூதரக அலுவலகம் தலைவர் அவர்களுக்கும், சென்னை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை இல்லை என்றால் கண்டிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.