- Home
- Cinema
- அடுத்தடுத்து பிளாப் ஆன படங்கள்... அமீர்கான் எடுத்த அதிரடி முடிவு - அஜித் போல் பிரேக் எடுக்க திட்டம்
அடுத்தடுத்து பிளாப் ஆன படங்கள்... அமீர்கான் எடுத்த அதிரடி முடிவு - அஜித் போல் பிரேக் எடுக்க திட்டம்
தங்கல் படத்தின் வெற்றிக்கு பின் அமீர்கான் நடிப்பில் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் மற்றும் லால் சிங் சத்தா ஆகிய படங்கள் அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்தன.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் அவருடன் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் ஹிட்டான பாரஸ்ட் கோம்ப் என்கிற படத்தை தழுவி தான் இப்படத்தையும் இயக்கி இருந்தார் அத்வைத் சந்தன்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. அதுமட்டுமின்றி இப்படம் ரிலீசுக்கு முன்பே இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாலிவுட்டில் பாய்காட் டிரெண்ட் வைரலாகியது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.
சுமார் 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட தான் வாங்கிய சம்பளத்தில் இருந்து பாதி தொகையை அமீர்கான் விட்டுக்கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இவ்வாறு லால் சிங் சத்தா ஏற்படுத்திய இழப்பு ஏராளம் என பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... பிரபல இயக்குனரை ‘குட்டிச்சுவரா போன டைரக்டர்’னு சொன்ன மிஷ்கின்! ஆக்ஷன் எடுக்க கோரி இயக்குனர் சங்கத்தில் புகார்
இந்நிலையில், தங்கல் படத்துக்கு பின் அமீர்கான் நடித்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் மற்றும் லால் சிங் சத்தா ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால், அவர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாரா. அதன்படி அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு எந்த படங்களிலும் நடிக்காமல் ஒரு பிரேக் எடுக்க உள்ளாராம். அந்த காலகட்டத்தில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவும், படத்தயாரிப்பில் கவனம் செலுத்தவும் அமீர்கான் முடிவு செய்துள்ளாராம்.
நடிகர் அஜித்தும் இதேபோல் ஒரு முடிவை எடுத்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. அவர் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடித்து முடித்த பின்னர் ஒன்றரை ஆண்டுகள் பிரேக் எடுத்து தனது நீண்ட நாள் கனவாக இருக்கும் உலக பைக் சுற்றுலாவை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
இதையும் படியுங்கள்... Varisu Movie: 'வாரிசு' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி லீக்..! உச்ச கட்ட அதிர்ச்சியில் படக்குழு..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.