MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமண விழாவில்... ரஜினி போல் ஸ்டைலாக சிகரெட் பிடித்த பிரபல ஹீரோயின் - காட்டுத்தீ போல் பரவும் ‘புகை’ப்படம்

திருமண விழாவில்... ரஜினி போல் ஸ்டைலாக சிகரெட் பிடித்த பிரபல ஹீரோயின் - காட்டுத்தீ போல் பரவும் ‘புகை’ப்படம்

திருமண விழாவில் கலந்துகொண்ட பிரபல நடிகை, நடிகர் ரஜினிகாந்த் போல் கையில் ஸ்டைலாக சிகரெட்டை பிடித்துக்கொண்டு தம் அடித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 16 2023, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பாலிவுட் நடிகர் சன்கி பாண்டேவின் மகளான அனன்யா பாண்டே, கடந்த 2019-ம் ஆண்டு கரண் ஜோகர் தயாரிப்பில் வெளிவந்த ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படம் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் அனன்யா. இதையடுத்து காளி பேலி, கெஹாரியான் போன்ற படங்களில் நாயகியாக நடித்த அனன்யாவுக்கு அடுத்ததாக கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் லைகர் திரைப்படம்.

24

பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அனன்யா. நடிகை சார்மி தயாரித்த இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் டப் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்தனர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் லைகர் திரைப்படம் திரைக்கு வந்தது.

இதையும் படியுங்கள்... அப்பாவை கொலை பண்ணிட்டாங்க... அம்மாவும் இல்ல! அனாதை ஆனேன் - கலங்கிய ‘குக் வித் கோமாளி’ விசித்ரா

34

லைகர் படத்தின் மூலம் தனது கெரியர் வேறலெவலுக்கு சென்றுவிடும் என்கிற கனவில் இருந்த அனன்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதன்பின் தென்னிந்திய படங்களே வேண்டாம் என முடிவெடுத்த அனன்யா, தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது டிரீம் கேர்ள் 2 என்கிற திரைப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனன்யா.

44

இந்நிலையில், மும்பையில், நடிகை அனன்யாவின் உறவினர் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண விழாவில் அனன்யாவும் கலந்துகொண்டுள்ளார். அப்போது அங்கு எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. அதில் நடிகை அனன்யா பாண்டே, ரஜினிகாந்த் போல் கையில் ஸ்டைலாக சிக்ரெட்டை வைத்துக்கொண்டு தம் அடித்ததும் அந்த போட்டோவில் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டோ தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... உதவாத அஜித், விஜய்... ரூ.45 லட்சம் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய சிரஞ்சீவி - எமோஷனல் ஆன பொன்னம்பலம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
Recommended image2
கருவை கலைக்க துணிந்த ரோகிணி! ஜோதிடரின் முகத்திரையை கிழித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved