உதவாத அஜித், விஜய்... ரூ.45 லட்சம் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய சிரஞ்சீவி - எமோஷனல் ஆன பொன்னம்பலம்
சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்த பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலத்திற்கு நடிகர் சிரஞ்சீவி ரூ.45 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராக கலக்கியவர் பொன்னம்பலம். இவர் விஜய், அஜித், ரஜினி, கமல் என ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். சிறுநீரக தொற்று ஏற்பட்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம் சமீபகாலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவர் தனது சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாக வீடியோ வெளியிட்டதை அடுத்து, ஏராளமான பிரபலங்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.
தற்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ள நடிகர் பொன்னம்பலம், தனக்கு உதவியவர்கள் பற்றி பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அதில் சிரஞ்சீவி செய்த உதவி குறித்து மனம்திறந்து பேசியுள்ளார் பொன்னம்பலம். தனக்கு உடல்நலம் சரியில்லாததால் தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அண்ணா என சிரஞ்சீவிக்கு மெசேஜ் செய்தாராம் பொன்னம்பலம். அந்த மெசேஜ் அனுப்பிய பத்தே நிமிடத்தில் போன் போட்டு பேசினாராம் சிரஞ்சீவி.
ஹாய் பொன்னம்பலம் எப்படி இருக்க, உனக்கு என்ன பிரச்சனை என கேட்டார். சிறுநீரகம் செயலிழந்துவிட்டது சார்னு சொன்னேன். உடனே, உனக்கா என கேட்டார். ஆமா அண்ணா சிகிச்சைக்கு பணமில்லை, வாழவே பிடிக்கலேனு சொன்னேன். அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. உடனே சென்னையில உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு போ என சொன்னார். நானும் சரி டயாலிசிஸ் செய்ய தான் உதவப் போகிறார் என நினைத்தேன்.
இதையும் படியுங்கள்... கூடப்பிறந்தவனே என்ன கொல்ல திட்டமிட்டார்! - வில்லன் நடிகர் பொன்னம்பலம் பகீர்!
அங்கு போனவுடன் எண்ட்ரி போட 200 ரூபாய் கார்டு ஒன்னு கொடுப்பார்கள். அந்த கார்டுக்கு கூட காசு வாங்கவில்லை. கிட்டத்தட்டா 45 லட்சம் செலவு பண்ணினார். ஏதோ ஒரு லட்சம் செலவு பண்ணுவார் என நினைத்து போன தனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்தது நெகிழ வைத்ததாக தெரிவித்தார் பொன்னம்பலம்.
அதேபோல் தனுஷும் தன்னிடம் பேசிக் கொண்டிருந்தபோதே அக்கவுண்டில் பணம் அனுப்பி உதவினார். அதேமாதிரி அர்ஜுன் சாரும் உடனே எனக்கு உதவினார். இவர்களெல்லாம் நான் எதிர்பார்க்காமல் உதவியவர்கள். அதேபோல் சரத்குமாரிடம் ஒருமுறை போன் செய்து கையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொன்னேன். உடனே சிம்ஸ் மருத்துவமனையில் பேசி எனது ஆபரேஷனுக்கு உதவினார். அவருடன் படத்தில் நடித்தபோது எங்கள் இருவருக்குள்ளும் சின்ன சின்ன மோதல்கள் இருந்தது.
இதனால் அவரிடம் உதவி கேட்கலாமா என தயக்கத்துடன் தான் இருந்தேன். பின்னர் கேட்ட பின்னர் உதவ ஆரம்பித்தவர், இன்று வரை எனக்கு உதவி செய்து வருகிறார். எனக்கு இருக்கும் கஷ்டங்களைப் பற்றி நிறைய நடிகர்களிடம் பேசி அவர் தான் உதவி செய்ய வைத்துள்ளார். அவர் இந்த அளவுக்கு எனக்கு உதவுவார் என நினைக்கவில்லை. அதேபோல் அஜித், விஜய், விக்ரம் ஆகியோர் தனது உடல்நலம் குறித்து ஒரு போன் பண்ணிகூட விசாரிக்கவே இல்லை என வருத்தப்பட்டுள்ளார் பொன்னம்பலம்.
இதையும் படியுங்கள்... ரூ.100 கோடி பட்ஜெட்டில் கமல் தயாரிக்கும் படத்துக்காக.. ஆளே டோட்டலாக மாறிய சிம்பு - வைரலாகும் நியூலுக் போட்டோஸ்