- Home
- Cinema
- குவியும் பட வாய்ப்புகளால் குஷியில் குந்தவை! விஜய், அஜித், தனுஷ் படம் உள்பட திரிஷா கைவசம் உள்ள அரை டஜன் படங்கள்
குவியும் பட வாய்ப்புகளால் குஷியில் குந்தவை! விஜய், அஜித், தனுஷ் படம் உள்பட திரிஷா கைவசம் உள்ள அரை டஜன் படங்கள்
பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகை திரிஷாவுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 96 படத்தின் வெற்றிக்கு பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகை திரிஷாவுக்கு, திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். மணிரத்னத்தின் கனவு திரைப்படமான இதில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு எதார்த்தமாக நடித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகை திரிஷாவுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்யின் மனைவியாக திரிஷா நடித்து வருகிறாராம். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக திரிஷாவுக்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வாய்ப்பு தான் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம். மகிழ்திருமேனி இயக்கிவரும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க திரிஷா தான் கமிட் ஆகி உள்ளாராம். ஆனால் இதுவரை அதுகுறித்த அறிவிப்பை வெளியிடாமல் படக்குழு சஸ்பென்ஸாக வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... ரெபெல் ஸ்டார் அம்பரீஷ் மகன் திருமணம்... பட்டு வேட்டி சட்டையில் கெத்தாக வந்து வாழ்த்திய ரஜினிகாந்த்
இதுதவிர தனுஷின் 50-வது படத்திலும் திரிஷா தான் ஹீரோயினாக நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை தனுஷே இயக்கி நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் மூலம் தனுஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளார் திரிஷா. இதற்கு முன்னர் இருவரும் கொடி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.
மேற்கண்ட மூன்று பிரம்மாண்ட படங்களை தவிர, தி ரோடு என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் திரிஷா. அவரின் 68-வது படத்தை கெளரவ் நாராயணன் இயக்க உள்ளார். இவர் தூங்காநகரம் படத்தை இயக்கியவர் ஆவார். இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் ராம் என்கிற படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் திரிஷா.
இதையும் படியுங்கள்... ஆரம்பமாகிறது விடாமுயற்சி... ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்கா பிளான் உடன் களமிறங்கும் அஜித் - முழு அப்டேட் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.