ஆரம்பமாகிறது விடாமுயற்சி... ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்கா பிளான் உடன் களமிறங்கும் அஜித் - முழு அப்டேட் இதோ
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை முழு அப்டேட் வெளியாகி உள்ளது.
அஜித் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். விடாமுயற்சி அஜித்தின் 62-வது படமாகும். இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. பின்னர் தயாரிப்பாளருக்கு கதை திருப்தி அளிக்காததால் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை இயக்குனராக கமிட் செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதமே விடாமுயற்சி படத்தில் கமிட் ஆன மகிழ் திருமேனி, மார்ச் மாத இறுதியில் அப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் நடிகர் அஜித்தின் தந்தை மரணமடைந்ததால், ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அஜித் நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சென்றதால் ஏப்ரல் மாதமும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.
இதையும் படியுங்கள்... ஜாதி பார்க்காமல் காதல்... பாதியில் நின்றுபோன திருமணம் - அஜித் மச்சானுக்கு இப்படி ஒரு சோகமான காதல் கதை இருக்கா!
இதையடுத்து மே மாதம் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரைடு நடத்தியதால், அந்த மாதமும் ஷூட்டிங் தொடங்க முடியாமல் போனது. இறுதியாக தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து ஷூட்டிங்கை தொடங்க விடாமுயற்சி படக்குழு தயாராகி உள்ளது. அதன்படி இந்த வாரத்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை தொடங்க உள்ளார்களாம். முதற்கட்ட படப்பிடிப்பை புனேவில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாரம் தொடங்கும் விடா முயற்சி பட ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதத்தில் முழுவதுமாக முடித்துவிட திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் நவம்பர் மாதம் முதல் நடிகர் அஜித் தனது உலக பைக் சுற்றுலாவின் இரண்டாம் கட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளதால், அதற்குள் விடாமுயற்சி ஷூட்டிங்கை முடித்துவிட உள்ளார்களாம். இதையடுத்து பின்னணி பணிகளை முடித்து படத்தை 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவரும் ஐடியாவில் படக்குழு உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... டிரக் மீது மோதி அப்பளம் போல் நொருங்கிய கார்... விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி