விஜய்யின் லியோ LCU படமா, இல்லையா? உடைந்தது சஸ்பென்ஸ்.. அப்ப தலைவர் 171..?
விஜய்யின் லியோ படம் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதி தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படம் 2023 ஆம் ஆண்டின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படங்களில் ஒன்றாக உள்ளது. மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், லியோ மீதான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
vijay movie leo poster
மேலும் லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த சூழலில் விஜய்யின் லியோ படம் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதி தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கைதி, விக்ரம் மூலம் லோகேஷ் உருவாக்கிய, LCUவில் தற்போது 3-வது படமாக லியோ படம் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்யாண கலை வந்துருச்சோ.. மஞ்சள் நிற சேலையில் தங்க சிலை போல் மின்னும் பூஜா ஹெக்டே.. நியூ கிளிக்ஸ்!
லோகேஷ் தனது கைதி மற்றும் விக்ரம் படங்களின் மூலம் உருவாக்கிய சினிமா பிரபஞ்சம், இப்போது LCUவில் மூன்றாவது பாகமாக லியோ இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் விஜய்யுடன் இணைந்து தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சினிமா தருணங்களில் ஒன்றை உருவாக்க உள்ளார் லியோ படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
Leo Movie
ஆனால், லியோ LCU-வின் ஒரு பகுதியாக இருந்தால், எந்த நேரத்திலும், கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோரை மீண்டும் ஒன்றாக திரையில் பார்க்க முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது. ஆனால் அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இதனிடையே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற தனிப்படம் உருவாக இருப்பதை உறுதிப்படுத்தினார். லியோ படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறதும் என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இது குறித்து இதுவரை இயக்குனரிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் இல்லை.
இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தலைவர் 171 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் வேலைகளை லோகேஷ் தற்போது தொடங்கி உள்ளார்.. தலைவர் 171 ஒரு தனித் திரைப்படமாக இருக்கும் என்றும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்காது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.