MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திரிஷா பிறந்தநாளுக்கு தளபதி விஜய் மற்றும் லியோ படக்குழு கொடுத்த வேறலெவல் சர்ப்ரைஸ்

திரிஷா பிறந்தநாளுக்கு தளபதி விஜய் மற்றும் லியோ படக்குழு கொடுத்த வேறலெவல் சர்ப்ரைஸ்

நடிகை திரிஷா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக லியோ படக்குழு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : May 04 2023, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை திரிஷா இன்று தனது 40-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். நடிகை திரிஷாவுக்கு ஸ்பெஷலான பிறந்தநாளாகவும் இது அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் அடுத்தடுத்து பிரம்மாண்ட ஹிட் படங்களை கொடுத்த குஷியில் இந்த பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் திரிஷா. அதுமட்டுமின்றி நடிகை திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

அந்த வகையில் நடிகை திரிஷா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. இப்படம் மூலம் நடிகர் விஜய்யும் திரிஷாவும் 14 ஆண்டுகளுக்கு பின்னர் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதையும் படியுங்கள்... திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..!

34

இந்நிலையில், இன்று 40-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை திரிஷாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. மறுபக்கம் அவர் நடிக்கும் படக்குழுவும் சில அப்டேட்டுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் லியோ படக்குழுவும் நடிகை திரிஷாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வேறலெவல் அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

44

அதன்படி நடிகை திரிஷா, விஜய்யும் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜோடியாக நிற்கும் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நடிகை திரிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இருவரும் பேக்கரி போன்ற செட்டுக்குள் போஸ் கொடுத்துள்ளதை பார்த்தால், படத்தில் பேக்கரி ஓனராக விஜய் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. நடிகர் விஜய்யைப் போல் நடிகை திரிஷாவுக்கு இது 67-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வயசு 40 பிளஸ் ஆனாலும் பியூட்டி குறையல! குழந்தை முதல் குந்தவை வரை... நடிகை திரிஷாவின் கியூட் போட்டோஸ் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
திரிஷா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image2
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved