வயசு 40 பிளஸ் ஆனாலும் பியூட்டி குறையல! குழந்தை முதல் குந்தவை வரை... நடிகை திரிஷாவின் கியூட் போட்டோஸ் இதோ
நடிகை திரிஷாவின் 40-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரின் குழந்தைப்பருவ புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில். நடிகை திரிஷாவின் குழந்தைப்பருவ புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகை திரிஷா, குட்டிக் குழந்தையாக இருந்தபோது சேரில் அமர்ந்தபடி கியூட் போஸ் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் தான் இது.
திரிஷா தனது தந்தை கிருஷ்ணன் மீது அதீத அன்பு வைத்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தனது தந்தையுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படம்.
பள்ளிப்பருவத்தில் சுட்டிக் குழந்தையாக இருந்த நடிகை திரிஷா, பொம்மையை கட்டிப்பிடித்தவாரு கொடுத்த கியூட் போஸ் இது.
நடனத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த நடிகை திரிஷா, சிறுவயதில் பரதநாட்டியம் ஆடியபோது எடுத்த புகைப்படம் தான் இது.
பட்டுப்பாவாடை சட்டை அணிந்து சமத்துக் குழந்தையாக அமர்ந்திருக்கும் நடிகை திரிஷா (வலது புறம் அமர்ந்திருப்பவர்)
நடிகை திரிஷா, தனது தாய் உமா மற்றும் தந்தை கிருஷ்ணன் உடன் சிறுவயதில் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது எடுத்த புகைப்படம்.
இதையும் படியுங்கள்... திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. இவ்ளோநாள் இதுதெரியாம போச்சே!
நடிகை திரிஷா பள்ளியில் பயின்றபோது எடுத்த புகைப்படம் இது. இதில் பிங்க் நிற உடை அணிந்திருப்பவர் தான் திரிஷா.
சோஃபாவில் ஹாயாக சாய்ந்து படுத்து சிறு வயதில் நடிகை திரிஷா எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் தான் இது.
பள்ளி ஆண்டுவிழாவில் நடிகை திரிஷா கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் இது. இதில் முதலில் நடந்து வருபவர் தான் திரிஷா.
பள்ளி சீருடையில் இருக்கும் நடிகை திரிஷா, தனது பள்ளித் தோழிகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இது.
நடிகை திரிஷா கல்லூரியில் தனது நெருங்கிய தோழிகளுடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட கியூட்டான குரூப் போட்டோ தான் இது.
நடிகை திரிஷா கடந்த 1999-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் பெற்றபோது மகிழ்ச்சிபொங்க கொடுத்த அழகிய போஸ் தான் இது.
ஹீரோயின் ஆன பின்னர் மாடர்ன் உடையில் நடிகை திரிஷா எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படம் தான் இது.
நடிகை திரிஷாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. இவ்வளவு வயதாகியும் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் குந்தவை கதாபாத்திரத்தில் 20 வயது பெண் போல் காட்சியளித்தது பலருக்கும் வியப்பாக இருந்தது. குந்தவை கெட் அப்பில் நடிகை திரிஷா எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தான் இது.
இதையும் படியுங்கள்... ரொம்ப ஓவர்... பிகினியில் படு மோசமாக கவர்ச்சி காட்டும் ரைசா!