- Home
- Cinema
- இன்று வரை எந்த தமிழ் நடிகையாலும் முறியடிக்க முடியாத சாதனைகளை செய்த K.R.விஜயா! அப்படி என்ன செய்தார்?
இன்று வரை எந்த தமிழ் நடிகையாலும் முறியடிக்க முடியாத சாதனைகளை செய்த K.R.விஜயா! அப்படி என்ன செய்தார்?
பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா செய்துள்ள சாதனைகளை மற்ற தமிழ் நடிகைகள் இன்றளவும் முறியடிக்க இயலவில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா

KR Vijaya
சினிமாவில் வெற்றி என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.. வெற்றி கிடைத்துவிட்டாலும் அந்த வெற்றியை தக்க வைப்பது என்பது அதை விட கடினமான ஒன்று. ஏனெனில் சினிமாவில் கொடிகட்டி பறந்த எத்தனையோ பிரபலங்கள் இருந்த தடமே இல்லாமல் காணாமல் போயுள்ளனர். ஆனால் பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா செய்துள்ள சாதனைகளை மற்ற தமிழ் நடிகைகள் இன்றளவும் முறியடிக்க இயலவில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. அப்படி அவர் என்ன தான் செய்தார்? இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
kr vijaya
வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கே.ஆர். விஜயா தனது வாழ்க்கையை நடத்த நாடகங்களில் நடித்தார். தற்செயலாக திரையுலகில் நுழைந்த அவர், தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். அதிக படங்களில் நடித்த தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் கே.ஆர். விஜயா. அதுவும் குறிப்பாக கதாநாயகியாகவே அவர் அதிக படங்களில் நடித்துள்ளார்.
பொதுவாக திருமணமான உடனே நடிகைளுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காது. இதனால் பல திருமணத்திற்கு பிறகு நடிப்பதில்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகும், மவுசு குறையாமல், அதிக தமிழ்ப்படங்களில் நடித்து வந்த நடிகை கே.ஆர். விஜயா.
KR Vijaya
இப்போது ஒரு நடிகை கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதும் பிரைவேட் ஜெட், சொகுசு கார்கள் வைத்திருப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் அந்த காலக்கட்டத்தில் சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்த ஒரே தமிழ்ந டிகை கே.ஆர்.விஜயாதான். மாடி நீச்சல்குளமுள்ள சொகுசு பங்களா, குதிரை வளர்ப்பு என மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த முதல் தமிழ் நடிகையாகவும் கே.ஆர் விஜயா தான் இருந்தார்.
ஒரு நடிகை நூறாவது படம் ஹீரோயினாக நடிப்பதே பெரிய விஷயம் ஆனால் நடிகை கே.ஆர் விஜயா தனது 100-வது மட்டுமின்றி 200-வது படத்தையும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்திலேயே நடித்திருந்தார் என்பது கூடுதல் சிறப்பு.
kr vijaya husband
பிரபல தொழிலதிபர் வேலாயுதம் என்பவரின் 3-வது மனைவி தான் கே.ஆர்.விஜயா. எனினும் கருத்து வேறுபாடின்றி அவரின் இறுதிக்காலம் வரையிலும் அவருடனேயே ஒற்றுமையாக வாழ்ந்தார். திருமணத்திற்குப் பிறகு நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதில் நடிக்க மறுத்தார் கே.ஆர். விஜயா. எனினும் தான் படங்களில் தொடர்ந்து நடிக்க கணவருடைய முழு ஆதரவும், ஊக்கமும் கிடைத்தபின்னரே நடிக்க வந்தார்.. முதல்தாரமாகவே கணவனுடன் நீண்டகாலம் வாழவியலாத பல நடிகைகளுக்கு மத்தியில், கே.ஆர்.விஜயாவின் இத்தகைய மணவாழ்வு ஆச்சர்யப்பட வைத்தது.
Actress KR Vijaya
தன் 100-வது படமான நத்தையில் முத்து பட வெற்றியைத் தன்செலவில் விழாவெடுத்துக் கொண்டாடிய முதல் தமிழ் நடிகை என்ற பெருமையையும் கே.ஆர். விஜயா பெற்றுள்ளார்.. அதில் எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
அனைத்து நடிகைகளுடனும், எந்த ஈகோவும் இல்லாமல் பழகும் தன்மை கொண்டவர். தன் கஷ்டகாலத்தில் உதவியவர்களை மறக்காமல், தான் வசதியாக வாழ்ந்த போது அவர்களுக்கு தேடி தேடி உதவியவர். பத்மினி, சாவித்திரிக்கு அடுத்து, சிவாஜிக்கு ஈடுகொடுத்து சிறந்த நடிப்பை வழங்கிய நடிகை கே.ஆர்.விஜயா.
KR Vijaya
1963ஆம் ஆண்டில், தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கே.ஆர்.விஜயா, இன்றளவும் திரையுலகில் பயணித்துக் கொண்டே உள்ளார். ஏறத்தாழ 59 ஆண்டுகால திரையுலகில் தொடர்ந்து பயணிக்கும் ஒரே தமிழ் நடிகை என்றால் என்றால் அது, கே.ஆர்.விஜயாதான். தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலக அளவிலும் எந்த நடிகையும் இந்த சாதனையை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. .
தமிழ்ப்பட நடிகைகளில் நாயகிகளை மையமாக கதை அம்சம் உள்ள படங்களில் முதன்முதலில் அதிகளவில் நடித்த தமிழ் நடிகையும் கே.ஆர்.விஜயாதான். சபதம், வாயாடி, திருடி, ரோஷக்காரி, மேயர் மீனாட்சி, அன்னை அபிராமி போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.
KR Vijaya
கே.ஆர். விஜயாவின் உண்மையான பெயர் தெய்வநாயகி. அந்த பெயருக்கேற்ப அதிக படங்களில் தெய்வ வேடங்களில் நடித்த சாதனையையும் செய்துள்ளார். படப்பிடிப்புக்கு கால தாமதமாக படப்பிடிப்புக்கு வருவதையும்,, தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படுவதையோ கே.ஆர் விஜயா விரும்பமாட்டார். முதல்நிலை நாயகியாக பிரபலமாக பல படங்களில் நடித்த காலகட்டத்திலேயே, இரண்டாம்நிலை நாயகியாகவும் நடித்தார். கே.ஆர் விஜயா. இப்படி நடித்தால் தன்இமேஜ் பாதிக்குமே என்றெல்லாம் அவர் கவலைப்பட்டதே இல்லை. தன் கேரக்டர் பிடித்து விட்டால் அந்த படத்தில் நடித்துவிடுவார்.