ஒரு சூறாவளி கிளம்பியதே... மாஸ் லுக்கிற்கு மாறிய லெஜண்ட் சரவணன் - போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
கோர்ட் சூட்டில் ஆளே டோட்டலாக மாறி மாஸாக போட்டோஷூட் நடத்தியுள்ள லெஜண்ட் சரவணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தொழிலதிபராக இருப்பவர் லெஜண்ட் சரவணன். பல கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் இவருக்கு நடிப்பின் மீது அதீத ஆசை இருந்தது. அதனால் தான் தன் கடை விளம்பரங்களில் தானே நடித்து அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். இவர் முன்னணி நடிகைகளுடன் விளம்பரங்களில் நடித்தது ஒரு புது டிரெண்டாகவும் மாறியது.
லெஜண்ட் சரவணன் நடித்த விளம்பரங்கள் பெரிய அளவில் ஹிட் ஆனதால், அவரது பார்முலாவை மற்ற முதலாளிகளும் பின்பற்ற தொடங்கினர். இப்படி ஒரு டிரெண்ட் செட்டராக இருந்த சரவணனுக்கு பின்னர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது.
இதையடுத்து தானே ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, தி லெஜண்ட் என்கிற படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவித்தார். தி லெஜண்ட் திரைப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கி இருந்தனர்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இப்படத்தை கடந்தாண்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் வெளியிட்டனர். இப்படத்திற்கு அதிகாலை 4 மணிக்காட்சியெல்லாம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டது.
இதையும் படியுங்கள்... 60 வயதாகும் கில்லி பட நடிகரை காதலித்து கரம்பிடித்த ரூபாலி; யார் இவர்? இருவருக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா?
தி லெஜண்ட் படத்தில் அண்ணாச்சியின் நடிப்பு விமர்சிக்கப்பட்டாலும், அப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாகவே அமைந்ததாக கூறப்படுகிறது. இதனால் செம்ம குஷியில் இருக்கும் சரவணன் தனது அடுத்தபடத்திற்காக வெறித்தனமாக தயாராகி வருகிறது.
தி லெஜண்ட் படத்தில் தாடி மீசை இன்றி நடித்திருந்த சரவணன், தற்போது தாடி, மீசையெல்லாம் வைத்து செம்ம மாஸ் லுக்கிற்கு மாறி இருக்கிறார். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு டோட்டலாக மாறி உள்ள லெஜண்ட் சரவணனின் மாஸ் லுக் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இதைப்பர்த்த ரசிகர்கள் அண்ணாச்சியா இது என வாயடைத்துப் போய் உள்ளனர். இதைப்பார்க்கும் போது விரைவில் அவர் நடிக்க உள்ள புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பீஸ்ட் பிரபலம் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு