60 வயதாகும் கில்லி பட நடிகரை காதலித்து கரம்பிடித்த ரூபாலி; யார் இவர்? இருவருக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா?
கில்லி படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்து பிரபலமான நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
1990-களில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இந்தி நடிகரான இவர் கடந்த 2001-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியான தில் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இந்தி நடிகராக இருந்தாலும் இவரை மிகவும் பிரபலமாக்கியது தமிழ் படங்கள் தான். தில் படத்திற்கு பின்னர் விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து டெரர் வில்லன் என பெயரெடுத்தார் ஆஷிஷ் வித்யார்த்தி.
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு தமிழில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது, விஜய்யின் கில்லி திரைப்படம் தான். தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸ் ஆன கில்லி படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்திருப்பார் ஆஷிஷ் வித்யார்த்தி. ஸ்டிரிக்ட் ஆன தந்தையாக நடித்திருந்தாலும், அதில் காமெடியிலும் கலக்கி இருப்பார் ஆஷிஷ் வித்யார்த்தி. இப்படத்திற்கு பின்னர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
அதன்படி தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு தற்போது 60 வயது ஆகிறது. சமீப காலமாக இவர் சோசியல் மீடியாவில் மிகவும் பேமஸ் ஆகிவிட்டார். ஊர் ஊராக சுற்றி, அங்குள்ள சிறுசிறு கடைகளில் இருக்கும் உணவுகளை டேஸ்ட் செய்து அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... பீஸ்ட் பிரபலம் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த நிலையில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று திடீரென இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. ராஜோஷி என்பவரை திருமணம் செய்துகொண்ட ஆஷிஷ் வித்யார்த்தி, அவருடன் 23 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார். இந்த ஜோடிக்கு அர்ஷ் என்கிற மகனும் உள்ளார். தற்போது அவருக்கு 23 வயது ஆகிறது.
இந்த நிலையில் தான் ஆஷிஷ் வித்யார்த்தி, அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். ரூபாலி பருவா கொல்கத்தாவின் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆஷிஷ் வித்யார்த்தியை ரூபாலி முதன்முதலில் சந்தித்தது ஒரு பேஷன் ஷூட்டில் தானாம். அப்போது ஒருவருக்கொருவர் நம்பர் மாற்றிக்கொண்டு பேச ஆரம்பித்துள்ளனர். பின்னர் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததோடு டேட்டிங்கும் செய்து வந்துள்ளனர்.
பின்னர் தங்களது உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக ரூபாலியை திருமணம் செய்துகொண்டுள்ளார் ஆஷிஷ். இவரது திருமணம் நடக்க இவரது மகன் தான் முக்கிய காரணமாம். அவர் கிரீன் சிக்னல் கொடுத்த உடன் தான் ரூபாலியை திருமணம் செய்துகொண்டாராம் ஆஷிஷ். ஆஷிஷ் வித்யார்த்திக்கும் ரூபாலிக்கும் இடையே 10 வயது வித்தியாசமாம். தற்போது ரூபாலிக்கு 50 வயது ஆகிறது.
இதையும் படியுங்கள்... கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு கன்னாபின்னானு கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்