பீஸ்ட் பிரபலம் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினுக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், இவர் பிக்பாஸுக்கு பின் முதன்முதலில் நாயகனாக நடித்த திரைப்படம் லிஃப்ட்.
லிஃப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின்னர் கவின் நாயகனாக நடித்த திரைப்படம் டாடா. கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கவினின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. தற்போது அவர் நடிக்க உள்ள அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு கன்னாபின்னானு கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
அதன்படி கவின் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்தை பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ் தான் இயக்க உள்ளார். அவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில், அனிருத் தான் இதற்கு இசையமைக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களான விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், கவின் படத்துக்கு இசையமைக்க முக்கிய காரணம், நடன இயக்குனர் சதீஷ் அனிருத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். சதீஷ், டான்ஸ் மாஸ்டராக மட்டுமின்றி விஜய்யின் பீஸ்ட், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா, சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மகள் வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய போகிறாரா விஜய்?... தீயாய் பரவும் தளபதி 68 ஹீரோயின் அப்டேட்