வாரிசு விஜய்க்கே டஃப் கொடுக்கும் லெஜெண்ட் சரவணன்..! ஸ்டைலிஷ் லுக்கில் அவரே வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!
தளபதி விஜய்யின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில், விஜய் போன்றே தலை முடி நெற்றியில் விழ லெஜெண்ட் சரவணன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தாறுமாறாக வைரலாகி வருகிறது.
முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக, லெஜெண்ட் சரவணன் தயாரித்து நடித்த 'தி லெஜெண்ட்' திரைப்படம், ஜூலை 28 ஆம் தேதி வெளியான நிலையில், தொடர்ந்து கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. அதே நேரம் இந்த படத்தின் மூலம் சிறந்த கருத்தை ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சரவணன் அருள் கூறி இருந்தாலும், கதையை சொதப்பியது தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என விமர்சனங்கள் எழுந்தது.
இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான நிலையில்... நெகடிவ் விமர்சனம் கிடைத்தாலும், முதலுக்கு மோசம் இல்லாமல் லாபம் ஈட்டி தந்ததாக சரவணன் அருள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலேயே தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகள்: பளீச் என ஜொலிக்கும் பஞ்சு மிட்டாய் நிற உடையில்... பளிங்கு சிலை போல் அழகு தேவதையாக மின்னும் பிரியங்கா மோகன்!
இவர் முதல் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க பலர் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இனிமேல் கதையை மிகவும் தெளிவாக தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதால்... சிறு இடைவெளிக்கு பின்பே மீண்டும் சரவணன் அருள் நடிப்பார் என கூறப்படுகிறது.
சமீப காலமாக, சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும், லெஜெண்ட் சரவணன், தற்போது தன்னுடைய தலை முடி... நெற்றியில் படும் படி உள்ள செம்ம ஸ்டைலிஷ் போட்டோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்களுடன்... சண்டை காட்சியில் தூள் கிளப்பிய ஷாருகான்..! வெளியான ஆச்சர்ய தகவல்!
தற்போது விஜய்யின் வாரிசு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி படு வைரலாகி வரும் நிலையில், தளபதிக்கே டஃப் கொடுக்கும் விதமாக இந்த புகைப்படத்தை லெஜெண்ட் சரவணன் வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகிறது.