நயன், திரிஷாலாம் வேணாம்; லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியான அக்கட தேசத்து நாயகி!
Legend Saravanan Heroine is Payal Rajput: லெஜெண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் ஹீரோயின் மற்றும் தற்போதைய ஷூட்டிங் குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Saravana Store Saravanan Arul
தொழிலதிபராக இருந்து நடிகராக மாறியுள்ள லெஜெண்ட் சரவணன் தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தற்போது துவங்கி உள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினருடன் லெஜெண்ட் சரவணன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
LEgend Saravanan Debut Movie
வணிக நிறுவனத்தில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி உள்ளவர் தான் தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளர் சரவணன் அருள். இவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால், தன்னுடைய கடை விளம்பரங்களில் அவரே மாடலாக தோன்றி, தமன்னா, ஹன்சிகா போன்ற கோலிவுட் டாப் நாயகிகளுடன் நடித்தார். பின்னர் தன்னை வைத்து விளம்பர படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் 'லெஜெண்ட்' என்கிற படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
ஒரே ஹீரோவுக்கு மகளாகவும், மனைவியாகவும் நடித்தவர்; யார் இந்த பப்ளி பேபி தெரிகிறதா?
Legend Second Movie Shooting Started
இந்த படத்தை லெஜெண்ட் சரவணனே தயாரித்து - நடித்திருந்த நிலையில், இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற போதிலும், வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. பின்னர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிடி ரசிகர்களின் பாராட்டு மழையிலும் நனைந்தது. 2022-ஆம் ஆண்டு 'லெஜெண்ட்' திரைப்படம் வெளியான நிலையில், இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படம் குறித்து இந்த ஆண்டு தான் சரவணன் அருள் அறிவித்தார்.
Legend Saravanan Movie Heroine
இந்த படத்தை தனுஷை வைத்து கொடி, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில் குமார் தான் இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் துவங்கியுள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையும் உள்ளார். தமிழில் டாப் ஹீரோயினாக இருக்கும் த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகள் வேண்டாம் என முடிவு செய்துள்ள லெஜெண்ட் சரவணன் தன்னுடைய இரண்டாவது படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புட்டை நடிக்க வைத்துள்ளார். இவர் நடிக்கும் இரண்டாவது படத்தையும் லெஜெண்ட் சரவணன் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் அடித்து நொறுக்கிய 'புஷ்பா 2'; ரூ.500 கோடி வசூல்; தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?