MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரே ஹீரோவுக்கு மகளாகவும், மனைவியாகவும் நடித்தவர்; யார் இந்த பப்ளி பேபி தெரிகிறதா?

ஒரே ஹீரோவுக்கு மகளாகவும், மனைவியாகவும் நடித்தவர்; யார் இந்த பப்ளி பேபி தெரிகிறதா?

கடந்த 42 வருடங்களாக தமிழ் திரையுலகை தன்னுடைய துள்ளலான நடிப்பால் அலங்கரித்து வரும், இந்த புகைப்படத்தில் இருக்கும் க்யூட் குழந்தை யார் என்பதை பார்க்கலாம். 

3 Min read
manimegalai a
Published : Dec 09 2024, 11:55 AM IST| Updated : Dec 09 2024, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Meena Childhood Photos

Meena Childhood Photos

எந்த வித சினிமா பின்னணியும் இன்றி, திரை உலகில் தன்னுடைய அதிர்ஷ்டத்தால் நுழைந்தவர் தான் பிரபல நடிகை மீனா. திருமண நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய தாயாருடன் மீனா கலந்து கொண்ட போது, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசன் எதேர்சையாக மீனாவை பார்த்துள்ளார். இவர் நடித்து வந்த 'நெஞ்சங்கள்' திரைப்படத்திற்கு ஒரு குழந்தை நட்சத்திரத்தை இயக்குனர் மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் தயாரிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் தேடி வந்த நிலையில், அந்த கதாபாத்திரத்திற்கு இந்த குழந்தை கச்சிதமாக பொருந்தும் என நினைத்த சிவாஜி கணேசன், மீனாவின் அம்மாவிடம் உங்கள் மகளை திரைப்படத்தில் நடிக்க வைக்க முடியுமா? என கேட்டுள்ளார்.

210
Meena Debut Child Artist

Meena Debut Child Artist

சிவாஜி கணேசனே தன்னுடைய மகளுக்கு நடிக்கும் வாய்ப்பை கொடுத்ததால், அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார் மீனாவின் தாயார். பின்னர் நெஞ்சங்கள் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவருடைய மீனாவின் நடிப்பு கவனம் பெற்றது. 

கோவிலில் சிம்பிளாக நடந்த திருமணம்; ஜமீன் வீட்டு பெண்ணை கரம்பிடித்தார் காளிதாஸ் ஜெயராம்!!

310
Sivaji Ganesan Movie Nenjangal

Sivaji Ganesan Movie Nenjangal

இதைத் தொடர்ந்து அதே ஆண்டே... எங்கேயோ கேட்ட குரல், பார்வையின் மறுபக்கம், தீர்ப்புகள் திருத்தப்படலாம், போன்ற படங்களில் நடித்தார். குழந்தை நட்சத்திரமாக மட்டும் சுமார் 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மீனா, தன்னுடைய 14 வயதிலேயே ஹீரோயினாக ப்ரொமோட் செய்யப்பட்டார்.

410
Meena Debut Heroine in Telugu

Meena Debut Heroine in Telugu

தெலுங்கில் நவயுகம் என்கிற திரைப்படத்தின் மூலம் 1990-ல் ஹீரோயினாக நடித்தார்.  இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது பின்னர் தமிழிலும் ஒரு புதிய கதை, என் ராசாவின் மனசிலே, இதய வாசல், ஓயாத ஊஞ்சல், போன்ற படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இளம் ஹீரோவுடன் காதல்? இரண்டாவது திருமணத்திற்கு தயாரான மெகா ஸ்டார் மகள் நிஹாரிகா!

510
Meena and Rajinikanth Super hit Movies

Meena and Rajinikanth Super hit Movies

90களில் முன்னணி கதாநாயகியாக மாறிய மீனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த எஜமான், முத்து, வீரா, போன்ற படங்கள் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.  ரஜினிகாந்த் உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புடன் ரஜினிகாந்த் படத்தில், கிட்ட தட்ட அவர் மகளாக பாவிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த மீனா, அவருக்கே ஜோடியாக நடித்த போது, ஆரம்பத்தில் சிலர் விமர்சனங்கள் செய்தாலும் பின்னர் மீனா - ரஜினிகாந்த் ஜோடியின் கெமிஸ்ட்ரி, ரசிகர்களின் ஃபேவரட்டாக மாறியது.

610
Meena Acting Kamal, Ajith, Prabhu and More heroes

Meena Acting Kamal, Ajith, Prabhu and More heroes

மேலும் கமலஹாசன், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், அஜித், சரத்குமார், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.  தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் மீனா நடித்துள்ளார். 

ஜெயராம் மகன் காளிதாஸ் - தாரிணி ப்ரீ வெட்டிங் கொண்டாட்ட புகைப்படங்கள்!

710
Meena Married Vidyasagar

Meena Married Vidyasagar

30 வயதை கடந்த பின்னர் திரைப்படங்களில் ஹீரோயின் வாய்ப்பு குறைய துவங்கியது. எனவே சன் டிவியில் லட்சுமி என்கிற சீரியலில் நடித்து வந்த மீனா, பின்னர் தன்னுடைய அம்மா பார்த்த மாப்பிள்ளையாக வித்யாசாகர் என்பவரை 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர் குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் நடிக்க வந்தார்.

810
Meena Daughter Nainika Debut Theri Movie

Meena Daughter Nainika Debut Theri Movie

மீனாவின் மகள் நைனிகாவும் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது மீனாவின் மகள் நைனிகா தன்னுடைய படிப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

நாக சைதன்யாவிற்கு இப்படியொரு வீக்னெஸா? திருமணத்தின் போது வெளியான சீக்ரெட்!
 

910
Meena Husband Vidyasagar Death

Meena Husband Vidyasagar Death

தன்னுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா கேரியர் ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த போது தான் மீனாவின் வாழ்க்கையை புரட்டி போட்டது, மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணம். சில வருடங்களாகவே புறாவின் எச்சத்தால் ஏற்படக்கூடிய நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட வித்தியாசாகர்  2022 ஆம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரை காப்பாற்ற நடிகை மீனா பல லட்சங்கள் செலவு செய்த போதும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது.
 

1010
Meena Again Acting Some Movies

Meena Again Acting Some Movies

கணவரின் மரணத்திற்கு பின் வீட்டிற்குள்ளே அடைந்து கிடைத்த மீனாவை மீண்டும் வெளியே அழைத்து வந்ததது, மீனாவின் தோழிகள் தான். தற்போது மீண்டும் திரையுலகில் நடிக்க துவங்கியுள்ளார். 5 வயதில் நடிக்க துவங்கி 48 வயது வரை, 42 வருடமாக சினிமாவில் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் கண்ணழகி மீனாவின் குழந்தை பருவ புகைப்படங்கள் தான் இவை.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved