ஜெயராம் மகன் காளிதாஸ் - தாரிணி ப்ரீ வெட்டிங் கொண்டாட்ட புகைப்படங்கள்!
காலிதாஸ் ஜெயராம் மற்றும் தாரிணியின் திருமணம் டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இவர்களது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Kalidas Jayaram and Tarini Wedding
மலையாள நடிகரான ஜெயராம், தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். கடந்த மே மாதம் ஜெயராமின் மகள் மாளவிகா திருமணம் நடந்து முடிந்த நிலையில் இந்த மாதம், டிசம்பர் 8-ஆம் தேதி ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமுக்கும் அவரின் காதலி தாரிணிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
Actor Jayaram Son Kalidas Pre wedding Reception
இதை முன்னிட்டு நேற்று திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஒன்றிணைய உள்ள காளிதாஸ் - தாரிணி தம்பதிகளை வாழ்த்து உள்ளனர். கடந்த 2 மாதத்திற்கு முன் , முதல்வர் முக ஸ்டாலின், ரஜினிகாந்த், இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு ஜெயராம் மற்றும் அவரின் மனைவி நேரில் சென்று அழைப்பிதழ் வைத்தது குறிப்பிடத்தத்தக்கது.
கடலும், காதலும்! வியக்க வைக்கும் அமலா பாலின் முதல் வெட்டிங் டே செலிபிரேஷன்
Kalidas Jayaram and Tarini Wedding Held on Guruvayur
தாரிணி - காளிதாஸ் ஜெயராம் திருமணம் குருவாயூரில் டிசம்பர் 8 அன்று நடைபெற உள்ளது. தாரிணி சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், திருமணத்திற்கு முன்பான ப்ரீ வெடிங் கொண்டாட்டம் ஜெயராம் மற்றும் தாரிணி குடும்பத்தினர் சார்பில், நடந்துள்ளது. போஸ்ட் மேரேஜ் ரிசப்ஷனை கேரளாவில் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Rayan Movie Actor Kalidas
ஜெயராமின் மகன் காளிதாசும் தன்னுடைய அப்பாவை போல் சினிமாவில் ஒரு நடிகராக உள்ளார். ஆரம்பத்தில் இவர் தமிழில் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், கடைசியாக தனுஷின் தம்பியாக இவர் நடித்திருந்த ராயன் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, 120 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
சன் டிவிக்கு தாவிய 4 மாதத்தில் கார் வாங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை!
Kalidas Jayaram Weds Model Tarini
காளிதாஸ் கடந்த சில வருடங்களாக தாரிணியை காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார். தன்னுடைய கல்லூரில் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் கவனம் செலுத்திய தாரிணி, ஃபேஷன் ஷோக்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா முதல் ரன்னர் அப் போன்ற பட்டங்களையும் வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டு மிஸ் திவா யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் தாரிணி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Celebrities attend Kalidas and Tarini Pre Wedding Ceremony
தாரிணி - காளிதாஸ் ஜெயராம் திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்... அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த இவர்களுடைய ப்ரீ வெடிங் ரிசப்ஷன் புகைப்படங்கள் வைரலா கிவருகிறது .
அமலா & சோபிதா இடையே உள்ள ஒற்றுமை: நாகார்ஜுனா திருமணத்திற்கு ஓகே சொல்ல இது தான் காரணமா?