Chandramukhi 2 Movie Update: ஜோதிகா கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன்...சந்திரமுகி 2 படத்தில் திடீர் ட்விஸ்ட்...
Chandramukhi 2 Movie Lakshmi Menon: பி. வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், வடிவேலு நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில், ஜோதிகா கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
chandramukhi 2
பி. வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், வடிவேலு நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தை பற்றிய தகவல் வருகின்ற நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2005ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
chandramukhi 2
இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த1993ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மணிச்சித்திரத்தாழு படத்தின் ரீமேக் ஆகும்.
chandramukhi 2
இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். மேலும் வடிவேலு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதை உறுதி செய்யும் விதமாக சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை லைகா தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.
chandramukhi 2
சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் , இதன், இரண்டாம் பாகம் முழுவதும் சந்திரமுகி, வேட்டையன் ராஜா கதாபாத்திரங்களை காட்டப்போகிறார்களாம். படம் முழுக்க வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் என்று கூறப்படுகிறது.
Chandramukhi 2
இருப்பினும், இந்த படத்தில் நடிக்க ஜோதிகா மறுப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு பதில் இந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதில் குழப்பம் நீடித்தது.
இதையடுத்து, இந்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியார அத்வானி, ராஷி கன்னா, ஆண்ட்ரியா அல்லது திரிஷா ஆகியோர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவர் நடிக்கவில்லை என்று தகவல் வெளியானது.
chandramukhi 2
இந்நிலையில், சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா நடித்த கங்கா கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன், நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.