- Home
- Cinema
- லிங்கா படம் பிளாப் ஆனதற்கு ரஜினியின் அந்த முடிவு தான் காரணம் - உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்
லிங்கா படம் பிளாப் ஆனதற்கு ரஜினியின் அந்த முடிவு தான் காரணம் - உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்
Rajinikanth : கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த லிங்கா திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசாகி தோல்வியை சந்தித்தது.

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் படங்களுக்கு இன்றளவும் எதிர்பார்ப்பு குறையாமல் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரஜினி தன் வசீகர நடிப்பால் கவர்ந்திழுத்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தை மாஸ் நடிகராக உயர்த்தியதில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் முக்கிய பங்குண்டு.
இவர்கள் இருவரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் முத்து. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரஜினியின் நட்சத்திர அந்தஸ்தை பன்மடங்கு உயர்த்தியது. இதில் உள்ள பாடல்களும், காமெடி காட்சிகளும் இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த அளவுக்கு மக்களின் பேவரைட் படமாக முத்து விளங்கி வருகிறது.
இதையடுத்து 4 ஆண்டு இடைவெளிக்கு பின் படையப்பா படம் மூலம் ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணைந்தது. முத்து அளவுக்கு இருக்குமா என எதிர்பார்த்து போன ரசிகர்கள், படம் அதற்கு ஒரு படி மேலேயே இருக்கே என சொல்லும் அளவுக்கும் கமர்ஷியல் ஹிட் அடித்து தமிழ் சினிமாவின் தலைசிறந்த கூட்டணியாக ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் காம்போ விளங்கியது.
இதையும் படியுங்கள்... Justin Bieber : இந்தியாவில் இசைக் கச்சேரி... பாப் இசை ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறார் ஜஸ்டின் பீபர்
பின்னர் ரஜினியை வைத்து ராணா என்கிற படத்தை இயக்க இருந்தார். ஆனால் அந்த படம் ஒரு சில பிரச்சனைகளால் கைவிடப்பட்டது. இதன்பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் லிங்கா திரைப்படம் உருவாகி இருந்தது. இப்படம் இவர்கள் கூட்டணியின் ஹாட்ரிக் வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்த படத்தின் தோல்விக்கு ரஜினி எடுத்த முடிவு தான் காரணம் என்பதை நேர்காணல் ஒன்றில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறி உள்ளார். அதன்படி, லிங்கா படத்திற்கு முதலில் தான் வேறு ஒரு கிளைமேக்ஸை வைத்திருந்தாகவும், ஷூட்டிங் சமயத்தில் ரஜினி சில சீன்களை பார்த்துவிட்டு, மாற்ற சொல்லிவிட்டாராம். முதலில் பலூன் சீனெல்லாம் இல்லவே இல்லையாம், ரஜினி சொல்லிவிட்டார் என்ற ஒரு காரணத்தினாலும், படத்தை குறிப்பிட்ட தேதியில் முடிக்கச் சொல்லி தயாரிப்பு தரப்பு அழுத்தம் கொடுத்ததாலும் வேறுவழியின்று அந்த கிளைமேக்ஸ் சீனை எடுத்து படத்தை வெளியிட்டதாக வேதனையுடன் கூறி உள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.
இதையும் படியுங்கள்... விஜய் சேதுபதியை அடிக்க வேண்டாமுன்னு சொல்லுக.. அப்பாவிடம் கதறி அழுத 'சூப்பர் சிங்கர்' பிரபலம்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.