Justin Bieber : புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ஜஸ்டின் பீபர், இந்தியாவில் இசைக் கச்சேரி நடத்த உள்ளாராம். இதற்கான டிக்கெட் விற்பனையும் தற்போது தொடங்கி உள்ளது.

பாப் இசைப் பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜஸ்டின் பீபர். உலகளவில் பேமஸ் ஆன இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். 28 வயதே ஆகும் ஜஸ்டின் பீபர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் கனடாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார் ஜஸ்டின் பீபர்.

அந்நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு 'ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்' (Ramsay Hunt Syndrome) என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரின் முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்தது. இதுதொடர்பாக கடந்த மாதம் இவர் வெளியிட்ட வீடியோ அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படியுங்கள்... Raj Mohan : உயிரிழந்த பிரபல நடிகர்... உடலை வாங்கக்கூட ஆளில்லாததால் அரசே தகனம் செய்த அவலம்!

அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 37 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து வேதனை அடைந்தனர். இந்த நோய் தாக்குதல் காரணமாக கனடாவில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, சிகிச்சை பெற்று வந்த ஜஸ்டின் பீபர், தற்போது குணமடைந்து மீண்டும் தனது இசைப் பணிகளை தொடங்கி உள்ளார். 

இந்நிலையில், ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெற உள்ளது. வருகிற அக்டோபர் 18-ந் தேதி இந்தியா வர உள்ள ஜஸ்டின் பீபர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள தனது இசைக்கச்சேரியில் பங்கேற்க உள்ளார். இதற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவர் இந்தியாவில் இசைக்கச்சேரி நடத்த உள்ளதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Justin Bieber : முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்தது... பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு என்ன ஆச்சு?