Asianet News TamilAsianet News Tamil

Justin Bieber : முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்தது... பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு என்ன ஆச்சு?

Justin Bieber : ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதால் பாடகர் ஜஸ்டின் பீபரின் முகத்தின் ஒரு பக்கம் செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது. 

Singer Justin Bieber affected by rare syndrome which causes face Paralysis
Author
Tamil Nadu, First Published Jun 11, 2022, 11:17 AM IST

பாப் இசைப் பாடல்களைப் பாடி பிரபலமான பாடகர் ஜஸ்டின் பீபருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 28 வயதே ஆகும் இவர் கனடாவின் டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சிக்காக தயாராகி வந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜஸ்டின் பீபர் தான் 'ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்' (Ramsay Hunt Syndrome) என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

வைரஸ் தாக்குதலால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் பாதிப்பால் என் முகத்தின் ஒரு பக்கம் செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது. அதேசமயம் படிப்படியாக கேட்கும் திறனையும் இழக்கும் ஆபாயமும் உள்ளது. 

என் மூக்கு, வாய் ஆகியவற்றை ஒரு பக்கம் சுத்தமாக அசைக்க முடியவில்லை. அதனால், டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியை நான் ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாகத் தான் இருக்கும். 

ஆனால் என்னால் உடல்ரீதியாக, செயல்பட முடியவில்லை, அதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளேன். இதிலிருந்து மீள முகத்திற்கு தேவையான பயிற்சிகளை எடுத்து வருகிறேன். ஓய்வு தேவைப்படுகிறது. நிச்சயம் 100 சதவீதம் முழுமையாக திரும்பி வருவேன் என்கிற நம்பிக்கை உள்ளது. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம்... விக்ரமுக்கு போட்டியாக ரிலீசாகி பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய பாலிவுட் படம்

Follow Us:
Download App:
  • android
  • ios