சந்திரபாபு முதல்.. யோகி பாபு வரை! அதிக சம்பளம் வாங்கிய காமெடி நடிகர்கள்!
ஒரு படத்திற்கு எந்த அளவுக்கு ஒரு ஹீரோ முக்கியமானவரோ அதே போல், காமெடி நடிகரும் முக்கியம். ஒரு ஹீரோவால் படத்தை சுவாரஸ்யமாக்க முடியும் என்றால், ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாமல் காமெடி மூலம் சிரிக்க வைப்பவர்கள் காமெடி நடிகர்கள் தான். காமெடி ரோலில் நடித்து... அதிக சம்பளம் பெற்ற நடிகர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
JP Chandrababu
சந்திரபாபு:
காமெடி வேடத்தில் நடிக்க துவங்கி, தன்னுடைய திறமையால் மிக குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை அடைந்தவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி-க்கு நிகராக சம்பளம் பெரும் காமெடி நடிகராக இருந்தவர். அந்த காலத்தில் இவரே மற்ற காமெடி நடிகர்களை விட அதிகம் சம்பளம் பெரும் நடிகராக இருந்தார். காமெடியை தாண்டி சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
Nagesh:
நாகேஷ்:
சந்திரபாபு வீழ்ச்சியை சந்தித்த சமயத்தில்... மளமளவென வளர்ந்தவர் நாகேஷ். இவர் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் பெறாவிட்டாலும், அதிகம் சம்பளம் பெரும் காமெடி நடிகர்களின் ஒருவராகவே பார்க்கப்பட்டார்.
Goundamani
கவுண்டமணி:
நாகேஷை தொடர்ந்து, பல காமெடி நடிகர்கள் வந்தாலும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது செந்தில் - கவுண்டமணி காமெடி தான். செந்தில் குறைவான சம்பளமே பெற்றாலும், கவுண்டமணி பல படங்களில் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளத்தை பெற்றுள்ளார்.
Vadivelu:
வடிவேலு:
90'ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை கவர்ந்தவர் வடிவேலு. மீம்ஸ் மன்னனாக இருக்கும் இவர்... சமீப காலமாக தான் நடிக்கும் படங்களுக்கு 5 கோடி வரை சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது.
கிண்டி அருகே நடிகர் சம்பத் ராம் சென்ற கார் விபத்து! நடிகரின் தற்போதைய நிலை?
Santhanam:
சந்தானம்:
முன்னணி காமெடி நடிகராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் சந்தானம். இவர் காமெடியனாக நடிக்கும் போது ஒரு படத்திற்கு 3 கோடி வரை சம்பளமாக பெற்ற நிலையில்... ஹீரோவாக புரோமோட் ஆனதும் 10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
Yogi babu
யோகி பாபு:
தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் காமெடி நடிகர் யோகி பாபு தான். இவர் கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்று வரும் நிலையில், இவர் காமெடியனாக நடிக்க ஒரு நாளைக்கு 5 லட்சம் பெரும் நிலையில்... ஹீரோவாக நடிக்க 5 முதல் 7 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் பிரபல நடிகையை திரைப்படத்தில் இருந்து வெளியேற்றிய எம்ஜிஆர்!
Soori
சூரி:
யோகி பாபுவை தொடர்ந்து, காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. 'விடுதலை' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்து, அடுத்தது கதையின் நாயகனாக கலக்கி வரும் சூரி... காமெடியனாக நடித்தபோது ஒரு படத்திற்கு 1 கோடி முதல் 2 கோடி வரை சம்பளமாக பெற்ற நிலையில், தற்போது ஹீரோவாக புரோமோட் ஆனதும், 10 கோடி வரை சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது.