கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் பிரபல நடிகையை திரைப்படத்தில் இருந்து வெளியேற்றிய எம்ஜிஆர்!
எம்ஜிஆர் முன்பு, கால் மேல் கால் போட்டு அமர்ந்தது ஒரு குற்றமா? பிரபல நடிகையை நண்பர் எம்.ஆர்.ராதா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் திரைப்படத்தில் இருந்து பிரபல நடிகையை வெளியேற்றியுள்ளார் எம்.ஜி.ஆர். அந்த நடிகை யார்? என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
MGR Fired Famous Heroine
தமிழ் சினிமாவில் தலைச்சிறந்த நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்த எம்ஜிஆர், பொதுவாகவே அவர் எப்படி அனைவருக்கும் மரியாதை கொடுக்கிறாரோ... அதே மரியாதை தனக்கும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர். ஒரு முறை படப்பிடிப்பில், தன் முன்பு மரியாதை இல்லாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நடிகையை அந்த படத்தில் இருந்தே... வெளியேற்றியதை, அந்த நடிகையை தன்னுடைய பழைய பேட்டியில் கூறியுள்ளார்.
MGR and Sivaji Ganesan
எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் இடையே, யார் சிறந்த நடிகர் என்கிற மிகப் பெரிய போட்டி நிலவி வந்த காலம் அது. எம்ஜிஆர் பல படங்களில் மக்களின் காப்பாளனாக நடித்து ஒருபுறம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இந்த படங்கள் பெரும்பாலும் அவரின் அரசியல் வருகையை உணர்த்தும் விதத்தில் அமைத்தன. ஆனால் ஏனோ எம்.ஜி,ஆரால்... சிவாஜி கணேசன் அளவுக்கு பர்ஃபார்மன்ஸ் காட்ட முடிந்ததில்லை.
7 வருட கஷ்டம்! ஒரே நாளில் ட்ராப்பான 'சேது' படம்.. முதல் ஹீரோ யார் தெரியுமா? அமீர் கூறிய தகவல்!
MGR Acting is Criticised:
சிவாஜி கணேசனை பொறுத்தவரை, அவரின் உடலே நடிக்கும். கண், மூக்கு, வாய்... உடல் மொழி போன்றவற்றால் ரசிகர்களை அசர வைப்பவர். ஆனால் எம்ஜிஆரின் நடிப்பு மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டாலும், சந்திரபாபு உள்ளிட்ட சில பிரபலங்கள் எம்ஜிஆர் முன்பே அவரின் நடிப்பை விமர்சித்த சம்பவங்களும் உண்டு.
Sowcar Janaki
இது ஒரு புறம் இருக்க, தெலுங்கில் சௌகார் என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஜானகி 'வளையாபதி' என்கிற படத்தின் மூலம் தமிழில் 1952ல் அறிமுகமானார். அடுத்தடுத்து தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு... பணம் படுத்தும் பாடு, ஆசை அண்ணா அருமை தம்பி, ஏழையின் ஆஸ்தி, காலம் மாறி போச்சு, சொந்த ஊரு, போன்ற தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தன. மேலும் எம்ஜிஆர் சிவாஜி போன்ற நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் முன்பே எம் ஆர் ராதாவுடன் ஒரு சில படங்களில் சவுகார் ஜானகி நடிக்க அந்த படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
Sowcar Janaki is First choice of Maadapura
சௌகார் ஜானகி முன்னணி நடிகையாக மாறிய பின்னர், 1962 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'மாடப்புறா' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்திற்காக தேர்வாகி அட்வான்ஸ் கொடுக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்புக்கு வந்த சவுகார் ஜானகி, கால் மேல் கால் போட்டு அமர்த்திருந்தாராம், அப்போது ஸ்டுடியோ உள்ளே எம்ஜிஆரின் கார் நுழைய, மற்றவர்களைப் போல் இவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டு, பின்னர் மீண்டும் சேரில் அமர்ந்து கொண்டு... கால் மேல் கால் போட்டு கொண்டு படப்பிடிப்பு துவங்குவதற்காக காத்திருந்தார்.
MR Radha
எம் ஆர் ராதாவும் அந்த படத்தில் நடிக்க, அவரை அழைத்த எம்.ஜி.ஆர் இந்தப் பெண் செய்வது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மரியாதை இல்லாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார் என ஏதோ சொல்ல, இதைக் கேட்ட எம் ஆர் ராதா அவர் எங்கோ இங்கிலாந்தில் பிறக்க வேண்டிய இங்கிலீஷ் காரியப்பா அப்படி உட்கார்ந்து இருக்கிறார். அதில் என்ன தப்பு இருக்கிறது. உண்மையில் ரொம்ப நல்ல பொண்ணு என கூறி சௌக்கிய ஜானகிக்கு சர்டிபிகேட் கொடுத்துள்ளார். எம் ஆர் ராதா எவ்வளவு சொல்லியும் அதை காதில் போட்டுக் கொள்ளாத எம்.ஜி.ஆர், கால் மேல் கால் போட்டு அமர்ந்த செயலுக்காக சௌகார் ஜானகியை அந்த படத்தில் இருந்தே வெளியேற்றி உள்ளார்.
நடிகை குஷ்பூவுக்கு என்ன ஆச்சு! தொடை வரைக்கும் போடப்பட்டுள்ள கட்டோடு வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!
Actor MGR
இதைத்தொடர்ந்து மீண்டும் எம்ஜிஆர் உடன் சுமார் மூன்று வருடங்கள் கழித்து 'பணம் படைத்தவன்' என்கிற திரைப்படத்தில் சௌகார் ஜானகி இணைந்து நடித்தாராம். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், எம்.ஜி.ஆர் 'மாடப்புறா' படத்தில் இருந்து தன்னை வெளியேற்றியதற்காக கண்டிப்பாக வருத்தி இருப்பார் என தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.