நடிகை குஷ்பூவுக்கு என்ன ஆச்சு! தொடை வரைக்கும் போடப்பட்டுள்ள கட்டோடு வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!
நடிகை குஷ்பூ தன்னுடைய காலில், தொடை முழுவதும் கிரிப் பேண்ட் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை பதற வைத்துள்ளார்.
Kushboo
தமிழ் சினிமாவில் அழகும், திறமையும், ஒருசேர்ந்த நடிகையாக அறியப்படுபவர் குஷ்பூ. பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் 'வருஷம் 16' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
80's Heroine Kushboo
80 மற்றும் 90களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த குஷ்பூ.. மாடனான பெண் கதாபாத்திரம் என்றாலும், குடும்ப பங்கான கதாபாத்திரம் என்றாலும் அப்படியே அதில் பொருந்தி நடிக்க கூடியவர். அதேபோல் கிராமத்து வேடம் என்றாலும், தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மெய் மறக்க செய்திடுவார்.
பொய் சொல்லி தப்பித்த ரோகிணி! மீனாவை காரணம் காட்டி போடும் புது பிளான்! சிறகடிக்க ஆசை அப்டேட்!
Kushboo family
இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, அவந்திகா மற்றும் அனந்திடா என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய மகள்கள் இருவருமே தற்போது படித்து முடித்துவிட்டு தங்களுடைய பணியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். குறிப்பாக குஷ்பூவின் மூத்த மகளான அவந்திகா சினிமா சம்பந்தமான படிப்பை படித்து முடித்துள்ள நிலையில், விரைவில் தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kushboo marriage
அதை போல் அனந்திடா தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கி வரும் 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். குஷ்பூ நடிகை என்பதை தாண்டி அரசியல் களத்திலும் மிகவும் பிரபலமாக இருப்பவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த குஷ்பூ... கடந்த முறை ஆயிரம் விளக்கு பகுதியில், சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோற்றார்.
தமன்னாவால்... ரம்பா குடும்ப வாழ்க்கையில் வந்த பிரச்சனை! கணவர் செய்ததை வெளியே சொன்ன நடிகை!
Kushboo injured
தற்போது பாஜகவில் மிக முக்கிய பொறுப்பை வகித்து வரும் இவர், எப்போதுமே மிகவும் துறுதுறுப்பாக இருக்கக்கூடிய பிரபலமாவார். இவர் தன்னுடைய காலில் மிகப்பெரிய கட்டோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். தொடை வரை கட்டப்பட்டுள்ள க்ரிப் பேண்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'நான் மற்றும் என்னுடைய பெஸ்டி' மிகசிறந்த காம்போ என பதிவிட்டு, இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்... உங்களுக்கு என்ன ஆச்சு என பதட்டத்துடன் கேட்டு வருவதோடு... கூடிய விரைவில் குணமடைய தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.