அட்டகாசமான வீடு.. பல சொகு கார்கள்.. படத்துக்கு கோடிகளில் சம்பளம் - தலை சுற்றவைக்கும் தமன்னாவின் Net Worth!
கடந்த 2005ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி, கடந்த 17 ஆண்டுகளில் பல்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து தனது 33 வயதில் மாபெரும் நடிகையாக உருவெடுத்து நிற்கிறார் பிரபல நடிகை தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.
தமன்னா கடந்த 2005ம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் இவர் முதல் முதலில் நடித்த திரைப்படம் கேடி என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பிறகு தொடர்ச்சியாக வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க துவங்கினார். இன்று சுமார் 17 ஆண்டு காலமாக பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக அவர் திகழ்ந்து வருகிறார்.
இமயமலையில் சுதந்திர தினம் கொண்டாடி ஆச்சர்யப்பட வைத்த ரஜினிகாந்த்! வைரலாகும் தேசபக்தி புகைப்படம்!
இந்நிலையில் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி தமன்னா வருடத்திற்கு சுமார் 12 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும், திரைத்துறையை தவிர பிற நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆகவும் தமன்னா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தோராயமாக ஒரு படத்திற்கு நான்கு முதல் ஐந்து கோடி ரூபாய் வாங்கும் தமன்னா, ஒரு ஐட்டம் சாங் ஆடுவதற்கு சுமார் 60 லட்சம் ரூபாய் வரை வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஐபிஎல் திருவிழாவில் 10 நிமிடம் தோன்றி நடனமாடியதற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் அவர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. மும்பை நகரில் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு மாபெரும் அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் தமன்னா லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ 320i, பென்ஸ் மாற்று மிட்சுபிஷி பஜிரோ ஸ்போர்ட் உள்ளிட்ட 4 உயர்ரக சொகுசு வாகனங்களை பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதேபோல தமன்னா பல விலை உயர்ந்த கைபைகளையும் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது, இது தவிர ராம்சரனின் மனைவியும், தமன்னாவின் தோழியுமான உப்பசனா சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வைர மோதிரத்தை அவருக்கு பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது. இது தவிர தமன்னா சொந்தமாக ஒரு நகைக்கடை வைத்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில் மொத்தமாக அவருடைய சொத்து மதிப்பு சுமார் 110 கோடி என்று கூறப்படுகிறது.