இமயமலையில் சுதந்திர தினம் கொண்டாடி ஆச்சர்யப்பட வைத்த ரஜினிகாந்த்! வைரலாகும் தேசபக்தி புகைப்படம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் உள்ள நிலையில், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சுதந்திர தினம் கொண்டாடிய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, மாலத்தீவுக்கு சென்று ஓரிரு வாரங்கள் ஓய்வெடுத்து நிலையில்... ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு முன்தினம் மாலத்தீவில் இருந்து கிளம்பி சென்னை வந்தார். இதை தொடர்ந்து, ஜெயிலர் படம் ரிலீசுக்கு ஓரிருதினங்களுக்கு முன்னர் திடீர் என தன்னுடைய நண்பர்களுடன் இமயமலைக்கு சென்றார்.
பள்ளி மாணவியாக மாறிய பிக்பாஸ் ஜனனி..! ஸ்கர்ட் அண்ட் ஷர்ட்டில் நடத்திய வேற லெவல் போட்டோ ஷூட்!
அவ்வப்போது இமயமலையில் ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது, இவர் சுதந்திர தினம் கொண்டாடிய புகைப்படம் ஒன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நாளைய தினம், நம் நாடு முழுவதும் சுதந்திரதினம் கொண்டாட உள்ள நிலையில், துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆஸ்ரமத்தில் அங்கு இருப்பவர்களுடனும், நண்பர்களுடனும் மூவர்ண தேசியக்கொடியை கையில் ஏந்தி இந்த சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலர் தலைவரின் தேச பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது என இந்த புகைப்படத்தை மேலும் வைரல் ஆக்கி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த வாரம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான, ஜெயிலர் திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான 4 நாட்களில், சுமார் 300 கோடிக்கும் மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளது. இந்த தகவலை தலைவருக்கு அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே வருவதால், ரஜினிகாந்த் செம்ம குஷியில் உள்ளதாக கூறப்படுகிறது.