சூப்பர் ஸ்டார் மற்றும் தளபதி.. இந்த காம்போவில் படம் ஒன்னு பண்ணனும் - விருப்பம் தெரிவித்த நெல்சன் திலீப்குமார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி உலக அளவில் பல நூறு கோடி ரூபாய் வியாபாரம் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் திரைப்படம், தளபதி விஜயினுடைய ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட நிலையில், விமர்சன ரீதியாக அந்த திரைப்படம் சில சறுக்கல்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒரு சில இடங்களில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் புறக்கணிக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவியது.
இதனை தொடர்ந்து தற்பொழுது வெளியாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம், நெல்சன் திலீப் குமாரின் புகழை மீண்டும் உச்சிக்கு கொண்டு சென்று உள்ளது என்றால் அது மிகைஅல்ல. ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறி உள்ளது.
அப்பா - மகன் இடையேயான எமோஷ்னல் ரோலர் கோஸ்டர் பீலிங் 'கருமேகங்கள் கலைகின்றன' ட்ரைலர் வெளியானது!
இதனையடுத்து சுமார் 4 ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் மனோபாலா விஜயபாலன் வெளியிட்டுள்ள தகவலின்படி நெல்சன் திலீப் குமார் தான் இதுவரை இயக்கிய அனைத்து திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க ஆர்வம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆகவே ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் நெல்சனுடன் மீண்டும் ஒரு படத்தில் இணையுள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் நெல்சன் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.
இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்த், ஓய்வு முடிந்து திரும்பியதும், ஞானவேல் இயக்கும் ஒரு படத்திலும், லோகேஷ் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.