MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வயதும் ஏறுது.. அழகும் கூடுது.. பிங்கில் பளிச்சுனு நிற்கும் பாவனா - கூல் பிக்ஸ் இதோ!

வயதும் ஏறுது.. அழகும் கூடுது.. பிங்கில் பளிச்சுனு நிற்கும் பாவனா - கூல் பிக்ஸ் இதோ!

Actress Bhavana : மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் பாவனா.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 09 2024, 11:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Bhavana

Actress Bhavana

கேரளாவின் திருச்சூரில் பிறந்த நடிகை பாவனாவின் தந்தை ஜி. பாலச்சந்திரன், மலையாள திரை உலகில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சூரிலேயே தனது பள்ளி படிப்பை முடித்த பாவனா, சிறு வயது முதலே நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் தான் வளர்ந்து வந்தார். இந்த சூழலில் தான் தனது 16 வது வயதில் மலையாள மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை அவர் தொடங்கினார்.

ஒருவழியா ஹீரோவை பைனல் பண்ணிட்டாரு - லைகா தயாரிப்பில் களமிறங்கும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Bhavana

Bhavana

மலையாள மொழியில் அவர் அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை பாவனா, கடந்த 2006ம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல இயக்குனர் மிஷ்கினின் "சித்திரம் பேசுதடி" திரைப்படத்தின் மூலம் தான் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக "வெயில்", "தீபாவளி", "கூடல் நகர்" போன்ற திரைப்படங்கள், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாவனாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

34
Kollywood Actress Bhavana

Kollywood Actress Bhavana

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகள் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் தொடர்ச்சியாக நல்ல பல படங்களில் நடித்து வந்த பாவனா, கடந்த 2018ம் ஆண்டு கன்னட மொழியில் பெரும் தயாரிப்பாளராக விளங்கி வந்த நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்பு அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு கசப்பான நிகழ்வின் காரணமாக, சில வருடங்களாக அவர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

44
Malayalam Actress Bhavana

Malayalam Actress Bhavana

தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள நடிகை பாவனா, மலையாள மொழியை விட கன்னட மொழியில் தான் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் "தி டோர்" என்ற தமிழ் திரைப்படத்திலும் அவர் இப்போது நடித்து வருகிறார். இறுதியாக அவர் தமிழில் கடந்த 2010ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான "அசல்" திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே சுமார் 14 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் தமிழ் மொழியில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். 

தீபாவளி ரேஸில் விடாமுயற்சி? SKவுக்கு தலைவலி கொடுக்க வருகிறாரா தல? லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
பாவனா (நடிகை)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved