பாக்ஸ் ஆபிஸில் புஸ்ஸுனு போன கவினின் கிஸ்... அடப்பாவமே முதல் நாள் வசூலே இவ்வளவு கம்மியா?
டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் நாயகனாக நடித்து திரைக்கு வந்துள்ள கிஸ் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kiss Box Office Collection
"கிஸ்" ஒரு ரொமான்டிக் காமெடி திரைப்படம். இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளனர். நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். கதை என்னவென்றால், ஒரு புத்தகத்தின் மூலம் காதலர்கள் முத்தம் கொடுத்தால் அவர்களின் எதிர்காலத்தை அறியும் சக்தியைப் பெறுகிறார் கவின். காதல் பிடிக்காத அவர், அந்த சக்தியை வைத்து காதலர்களை பிரிக்கிறார். ஆனால், ப்ரீத்தியை சந்தித்த பிறகு அவர் மனதில் மாற்றம் ஏற்படுகிறது. அவரை சந்தித்த பின் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.
கிஸ் படத்தின் விமர்சனம்
விமர்சனங்களைப் பொறுத்தவரை, படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சிலருக்கு கவின் மற்றும் ப்ரீத்தியின் நடிப்பு பாராட்டப்படுகிறது. குறிப்பாக, லிப் கிஸ் காட்சி பேசப்படும். ஜென் மார்ட்டின் இசையில் சில பாடல்கள் சிறப்பாக உள்ளன. விடிவி கணேஷ் மற்றும் ஆர்.ஜே. விஜய் நகைச்சுவை காட்சிகளில் சிரிக்க வைக்கின்றனர். ஆனால், திரைக்கதை சுவாரசியமாக இல்லை என்றும், முதல் பாதி மெதுவாக நகர்வதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன. கிளைமாக்ஸ் சிஜி காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிஸ் படம் எப்படி இருக்கிறது?
மொத்தத்தில், "கிஸ்" திரைப்படம் இளைஞர்களுக்கு ஒரு ஜாலியான படமாக இருக்கும். பேண்டசி பின்னணியில் உருவாகி உள்ள ரொமாண்டிக் காமெடி கதை தான் இந்த கிஸ். கவின், ப்ரித்தி அஸ்ராணி, வி டி.வி கணேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் கலகலப்பாக உள்ளன. கவின், ப்ரித்தி காதல் காட்சி, ரமேஷ் ராவ், தேவயானி, கவுசல்யா அன்பு, அந்த நாய் பாசம், விடிவி கணேசின் ஜிம், திருமண மண்டப காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.
கம்பேக் கொடுத்தாரா கவின்?
கிஸ் திரைப்படம் கவினுக்கு கம்பேக் படமாக அமையுமா என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஏனெனில் கிஸ் படத்திற்கு முன்னதாக கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் மற்றும் ப்ளெடி பெக்கர் ஆகிய இரண்டு படங்களும் சொதப்பலாக அமைந்தன. அதில் ஸ்டார் படம் வசூலில் தப்பித்துவிட்டது. ஆனால் ப்ளெடி பெக்கர் படுதோல்வியை சந்தித்ததோடு, அப்படத்தை தயாரித்த இயக்குனர் நெல்சனுக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்தது.
கிஸ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ்
அதே நிலைமை தான் கிஸ் படத்திற்கும் வரும் என தோன்றுகிறது. ஏனெனில் இப்படத்தின் முதல் நாள் வசூல் படுமோசமாக உள்ளது. கிஸ் படம் முதல் நாளில் இந்தியாவில் வெறும் 40 லட்சம் மட்டுமே வசூலித்திருக்கிறது. அதிலும் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 18 லட்சம் தான் வசூல் செய்துள்ளது. இது கவினின் முந்தைய படமான ப்ளெடி பெக்கர் மற்றும் ஸ்டார் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் மிகக்குறைவு, ப்ளெடி பெக்கர் முதல் நாளில் 2.8 கோடி வசூலித்திருந்தது. ஸ்டார் படம் முதல்நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கோடி வசூலித்திருந்தது. அதோடு ஒப்பிடுகையில், கிஸ் படுமோசமான வசூலை பெற்றிருக்கிறது.