MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரியல் ஹீரோவான KGF இயக்குனர்! சொந்த ஊரில் மருத்துவமனை கட்ட பணத்தை வாரிவழங்கிய பிரசாந்த் நீல்- எவ்வளவு தெரியுமா?

ரியல் ஹீரோவான KGF இயக்குனர்! சொந்த ஊரில் மருத்துவமனை கட்ட பணத்தை வாரிவழங்கிய பிரசாந்த் நீல்- எவ்வளவு தெரியுமா?

Prashanth Neel : இயக்குனர் பிரசாந்த் நீல் தனது சொந்த ஊரில் மருத்துவமனை கட்ட உதவியுள்ள தகவல் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 17 2022, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கன்னட திரையுலகில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான உக்ரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரசாந்த் நீல். இதையடுத்து இவர் இயக்கிய கே.ஜி.எஃப் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு மட்டுமின்றி அவரை இந்திய அளவில் பாப்புலர் ஆக்கியது. கே.ஜி.எஃப் படத்தின் வெற்றிக்கு பின் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வெற்றிகண்டார் பிரசாந்த் நீல்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து அவர் இயக்கத்தில் தற்போது சலார் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் டிரைலரை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... அதுவும் எப்போ தெரியுமா?

34

இந்நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் தனது சொந்த ஊரில் மருத்துவமனை கட்ட உதவியுள்ள தகவல் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவடத்தில் உள்ள நீலகண்டபுரம் தான் பிரசாந்த் நீலின் பூர்வீக கிராமம். தனது தந்தையின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பூர்வீக கிராமத்துக்கு சென்றுள்ளார் பிரசாந்த் நீல்.

44

அப்போது அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் கண் மருத்துவமனை கட்ட ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார் பிரசாந்த் நீல். இந்த தகவலை கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ரகுவீர ரெட்டி தெரிவித்துள்ளார். இவரின் சொந்த தம்பி சுபாஷின் மகன் தான் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளர் அஷ்வின் கங்கராஜு இயக்கத்தில் தயாராகும் '1770'!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image2
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Recommended image3
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved