KGF 2 Box Office :முதல் நாளிலேயே ரூ.100 கோடியை தாண்டிய வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் ‘கே.ஜி.எஃப் 2’
KGF 2 Box Office : தமிழில் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வெளியானது. பீஸ்ட் படம் 800க்கும் மேற்பட்ட திரைகளிலும், கே.ஜி.எஃப் 2 300க்கும் மேற்பட்ட திரைகளிலும் வெளியிடப்பட்டன.
யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கே.ஜி.எஃப் 2. முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகமும் செம்ம மாஸாக இருப்பதால் இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வந்து குவிந்துள்ளன. பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள இப்படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத போதும், இப்படம் முதல் நாளில் ரூ.130 கோடி வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதில் கே.ஜி.எஃப் படத்தின் இந்தி பதிவிப்பு மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வெளியானது. பீஸ்ட் படம் 800க்கும் மேற்பட்ட திரைகளிலும், கே.ஜி.எஃப் 2 300க்கும் மேற்பட்ட திரைகளிலும் வெளியிடப்பட்டன. இதில் பீஸ்ட் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், கே.ஜி.எஃப் 2 படத்துக்கு அதிகளவில் திரைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இதனால் இரண்டாம் நாளில் கே.ஜி.எஃப் 2 படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வருகிற அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் பாக்ஸ் ஆபிஸில் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் பல்வேறு சாதனைகளை தகர்த்தெரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாம்.
இதையும் படியுங்கள்... Johnny Depp :பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து சித்ரவதை... பிரபல நடிகர் மீது மாஜி மனைவி பகீர் குற்றச்சாட்டு