MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சாவித்திரியின் சாம்ராஜ்யம் சரிந்தபோது ஜெமினி என்ன செய்தார்?! - திரை மறைவில் நடந்த கண்ணீர் நாடகம்!

சாவித்திரியின் சாம்ராஜ்யம் சரிந்தபோது ஜெமினி என்ன செய்தார்?! - திரை மறைவில் நடந்த கண்ணீர் நாடகம்!

மகாநடி சாவித்திரியின் துயரமான காலகட்டத்தை இந்த கட்டுரை விவரிக்கிறது. அவரது வீழ்ச்சியின் போது 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன் என்ன செய்தார், அவர்களின் உறவின் சிக்கல்கள் மற்றும் சாவித்திரியின் மாறாத ஈகை குணம் ஆகியவற்றை இது ஆராய்கிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 20 2026, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
காதல் மன்னன் என்ன செய்தார் தெரியுமா?
Image Credit : Asianet News

காதல் மன்னன் என்ன செய்தார் தெரியுமா?

தென்னிந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற அரசியாக, 'மகாநடி'யாக வலம் வந்தவர் சாவித்திரி. ஒரு பக்கம் புகழின் உச்சி, மறுபக்கம் சொத்துக்கள் பறிபோன துயரம் என அவரது வாழ்க்கை ஒரு முழுநீளத் திரைப்படத்தையே மிஞ்சும் ரகம். குறிப்பாக, அவரது சாம்ராஜ்யம் சரிந்தபோது, 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது இன்றும் பலரால் கேட்கப்படும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி!

26
மழை இரவில் தொடங்கிய மர்மக் காதல்!
Image Credit : instagram

மழை இரவில் தொடங்கிய மர்மக் காதல்!

ஆரம்பத்தில் ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் இடையே மலர்ந்த காதல், ஒரு சினிமா காட்சிக்கும் மேலானது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்த ஜெமினியின் இல்லத்திற்கு, ஒரு நள்ளிரவு மழையில் தஞ்சம் தேடி வந்தாராம் சாவித்திரி.  அப்போது அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஜெமினிகணேசன் பின்னர் தாலிகட்டினாராம். ஆனால், இந்தக் காதல் ஒரு கட்டத்தில் பெரும் 'பொசசிவ்' உணர்வாக மாறியது. "நீ முதல் மனைவி வீட்டுக்குச் சென்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்" என்று சாவித்திரி மிரட்டியதால், ஜெமினி ஒரு 'இரட்டை வாழ்க்கை' வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். பகலில் ஒரு வீடு, இரவில் சாவித்திரி என அந்த காதல் மன்னன் ஊசலாடிக்கொண்டிருந்தார் என சினிமா வட்டாரங்களில் மட்டுமல்லாமல், ஜெமினியின் உறவினர்களும் கூறுகின்றனர்.

Related Articles

Related image1
ஒரே ராகத்தில் இளையராஜா அடித்த ‘சிக்ஸர்கள்’! இசைஞானி நிகழ்த்திய இசை மாயாஜாலம் இதுதான்!
Related image2
டி.ராஜேந்தர் எழுதிய பாடலை கேட்டு மெய்மறந்த கண்ணதாசன்.! கவிஞர் பாராட்டிய அந்த சூப்பர் ஹிட் பாட்டு எது தெரியுமா?
36
சாம்ராஜ்யம் சரிந்தபோது... ஜெமினி எங்கே?
Image Credit : instagram

சாம்ராஜ்யம் சரிந்தபோது... ஜெமினி எங்கே?

சாவித்திரியின் வீழ்ச்சிக்கு அவரது அதீத நம்பிக்கையும், 'பிராப்தம்' போன்ற படங்களின் தோல்வியும் முக்கியக் காரணம். கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிபோய், வருமான வரிச் சோதனையில் சிக்கித் தவித்தபோது, சாவித்திரி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் உடைந்து போனாராம். 

மௌன சாட்சியான ஜெமினி

அதன் பிறகு ஜெமினி - சாவித்திரி இடையே எழுந்த மனஸ்தாபம் இருவருக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒருவர் மீது ஒரவர் அளவு கடந்த அன்பை செலுத்தியதே அதற்கு காரணம் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், தனது சாம்ராஜ்யம் சிதைவதைக் கண்டு சாவித்திரி துடித்தபோது, அதைத் தடுக்க முடியாமல் ஜெமினி கணேசன் இருந்தாராம்.

46
பிரிந்து கிடைந்த இதயங்கள்
Image Credit : instagram

பிரிந்து கிடைந்த இதயங்கள்

சாவித்திரி கோமா நிலைக்குச் சென்று உயிருக்குப் போராடிய 19 மாதங்களும், ஜெமினி கணேசன் ஒரு குற்ற உணர்ச்சியில் தவித்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. காதல் மன்னனால் தன் காதலியைத் துயரத்திலிருந்து மீட்க முடியாமல் போனது ஒரு வரலாற்றுச் சோகம்.

56
இறுதி வரை மாறாத 'வள்ளல்' குணம்!
Image Credit : Google

இறுதி வரை மாறாத 'வள்ளல்' குணம்!

செல்வங்கள் கரைந்து, வறுமையின் பிடியில் சிக்கியபோதும் சாவித்திரி என்ற 'நடிகையர் திலகம்' தனது ஈகை குணத்தை மட்டும் விட்டுக்கொடுக்கவில்லை. போர் நிதிக்காகத் தான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் மேடையிலேயே கழற்றிக் கொடுத்த அந்தத் தாராள மனசு, வேறெந்த நடிகைக்கும் வராத ஒன்று. தன் வீட்டில் வறுமை தாண்டவமாடிய போதும், தன்னைத் தேடி வந்து "பசி" என்றவர்களுக்கு, வீட்டில் இருந்த விலை உயர்ந்த பாத்திரங்களைக் கொடுத்தாவது அவர்களின் பசியைப் போக்கினார்.

66
மகாநடிகை சொல்லி சென்ற பாடம்
Image Credit : instagram

மகாநடிகை சொல்லி சென்ற பாடம்

சாவித்திரியின் வாழ்க்கை நமக்குச் சொல்வது ஒன்றுதான் - "புகழும் பணமும் நிரந்தரமல்ல, ஆனால் நாம் செய்த தர்மமும் காட்டிய அன்பும் மட்டுமே காலத்தை வென்று நிற்கும்." சாவித்திரி வீழ்ந்தபோது ஜெமினி தவித்த தவிப்பு ஒரு பக்கமிருக்க, இன்று நாம் நினைவுகூர்வது அந்தப் பேரரசியின் நடிப்பையும், அவரது மாறாத வள்ளல் குணத்தையும் மட்டுமே!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இசை
ஜெமினி கணேசன்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே பாடலில் பாடகர் TMS கெரியரை முடிச்சுவிட்ட டி ராஜேந்தர் - அது என்ன பாட்டு தெரியுமா?
Recommended image2
சொக்கவைக்கும் மந்திர குரல்! மனதை வருடும் யேசுதாஸின் டாப் 5 பாடல்கள்!
Recommended image3
RK X KH Movie : ரஜினி - கமல் இணையும் படம்... ரெட் ஜெயண்ட்ஸ் வெளியிட்ட பட்டாசான அப்டேட்
Related Stories
Recommended image1
ஒரே ராகத்தில் இளையராஜா அடித்த ‘சிக்ஸர்கள்’! இசைஞானி நிகழ்த்திய இசை மாயாஜாலம் இதுதான்!
Recommended image2
டி.ராஜேந்தர் எழுதிய பாடலை கேட்டு மெய்மறந்த கண்ணதாசன்.! கவிஞர் பாராட்டிய அந்த சூப்பர் ஹிட் பாட்டு எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved