MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Leader Box Office : வசூலில் நம்பர் 1 இடம்பிடித்த லீடர்... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Leader Box Office : வசூலில் நம்பர் 1 இடம்பிடித்த லீடர்... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்துள்ள லீடர் படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில், அப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 06 2026, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Leader Movie Day 1 Box Office
Image Credit : X

Leader Movie Day 1 Box Office

லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்துள்ள இரண்டாவது படம் லீடர். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்த லெஜண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் தோல்வியை சந்தித்த பின்னர் கட்டாயம் ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு அவர் நடித்துள்ள படம் தான் லீடர். அப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன்னர் எதிர்நீச்சல், கொடி, கருடன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். லீடர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள லெஜண்ட் சரவணன் தான் அப்படத்தை தயாரித்தும் உள்ளார். அப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

24
லீடர் படத்தின் வசூல்
Image Credit : X

லீடர் படத்தின் வசூல்

லீடர் திரைப்படத்தில் சரவணன் உடன் அறந்தாங்கி நிஷா, விடிவி கணேஷ், ஆண்ட்ரியா, ஷியாம், பாயல் ராஜ்புட் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி லீடர் திரைப்படம் அதற்கு போட்டியாக ஏப்ரல் 3ந் தேதி வெளியான படங்களைக் காட்டிலும் அதிகளவில் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடம்பிடித்துள்ளது. பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் இந்த வீக் எண்ட் வசூல் ஜெட் வேகத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
லெஜண்டின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? லீடர் விமர்சனம் இதோ
Related image2
லெஜண்ட் சரவணனின் 2வது படம்... லீடர் ஆக மாறி ஆக்‌ஷனில் அடிதூள் கிளப்பும் அண்ணாச்சி..!
34
லீடர் படத்தின் கதை
Image Credit : X

லீடர் படத்தின் கதை

சரவணன், ஒரு சாதாரண கார் மெக்கானிக்காக தனது மகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார். மனைவி இல்லாத குறையை உணர்த்தாமல், மகளை உயிராகக் காத்து வளர்க்கும் அப்பாவின் பாசம் படத்தின் ஆரம்பத்திலேயே நன்றாக பதிகிறது. இதே நேரத்தில், தூத்துக்குடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக வரும் ஒரு மர்ம கண்டெய்னரைச் சுற்றி சம்பவங்கள் சுழல தொடங்குகின்றன. அதைத் துரத்திச் செல்லும் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா, உண்மையை கண்டுபிடிக்க பல சவால்களை எதிர்கொள்கிறார்.

ஒரு கட்டத்தில், துறைமுகத்துடன் தொடர்புடைய ஒரு ரவுடியின் கார் சரவணனிடம் வேலைக்கு வருகிறது. அதன்பிறகு அந்த ரவுடி சரவணனின் வாழ்க்கையில் அடிக்கடி நுழையத் தொடங்குகிறார். இதை பயன்படுத்திக் கொள்ளும் ஆண்ட்ரியா, சரவணனின் மகளை மறைத்து வைத்து, அந்த ரவுடி தான் கடத்தியதாக நம்ப வைக்கிறார். மகளை மீட்கும் அவசரத்தில், சரவணன் போலீஸ் கூறும் வழியில் நடக்கத் தொடங்குகிறார். ஆனால் கதை முன்னேறும்போது, இந்த முழு விளையாட்டையும் வடிவமைத்தது ஆண்ட்ரியா அல்ல, சரவணனே என்பதும் தெரிய வருகிறது. ஏன் அவர் இப்படிச் செய்தார்? அந்த ரவுடியுடன் அவருக்கு என்ன பகை? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

44
லீடர் விமர்சனம்
Image Credit : X

லீடர் விமர்சனம்

நடிப்பில் சரவணன் இந்த முறை அதிக நம்பிக்கையுடன் தெரிகிறார். முதல் படத்தை விட மிகுந்த முன்னேற்றம் தென்படுகிறது. குறிப்பாக மகளுடன் இருக்கும் உணர்ச்சி காட்சிகளிலும், ஆக்‌ஷன் சீன்களிலும் அவர் வித்தியாசமான முயற்சியை காட்டியிருக்கிறார். மாஸ் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்த முயற்சித்திருப்பது தெளிவாக தெரிகிறது. இயக்குநர் கதையை நகர்த்தும் விதம் சீராகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை, இடைவெளிக்குப் பிறகு வேகம் பெறுகிறது. கிளைமாக்ஸ் பகுதி திருப்திகரமாக அமைந்துள்ளது.

ஆண்ட்ரியா, ஷியாம் உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து நிறைவு தருகிறார்கள். தொழில்நுட்ப ரீதியாகவும் படம் வலுவாக உள்ளது. ஜிப்ரானின் பின்னணி இசை பல காட்சிகளில் அதிர்வை ஏற்படுத்துகிறது. சண்டைக் காட்சிகளும், காட்சிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளன. மொத்தத்தில், இந்த படம் சரவணனுக்கு ஒரு வலுவான கம்பேக் ஆக அமைந்திருக்கிறது. ரசிகர்களுக்கு ஒரு நல்ல மாஸ் என்டர்டெய்னராக லீடர் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?
Recommended image2
3900 கோடி வசூல்! பாகுபலி, துரந்தர், தங்கல் படங்களை எல்லாம் ஓரங்கட்டிய அந்த இந்திய படம் எது?
Recommended image3
சீட்டிங் பண்ணிய சிந்தாமணி... விஜயாவுக்கு விதிக்கப்பட்ட கெடு - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்
Related Stories
Recommended image1
லெஜண்டின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? லீடர் விமர்சனம் இதோ
Recommended image2
லெஜண்ட் சரவணனின் 2வது படம்... லீடர் ஆக மாறி ஆக்‌ஷனில் அடிதூள் கிளப்பும் அண்ணாச்சி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved