லெஜண்டின் ஆக்ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? லீடர் விமர்சனம் இதோ
துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், ஆண்ட்ரியா, லால், ஷியாம் ஆகியோர் நடிப்பில் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள லீடர் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

Leader Movie Twitter Review
தமிழ் சினிமாவில் மிகவும் ட்ரோல் செய்யப்பட்ட படங்களில் லெஜண்ட் திரைப்படமும் ஒன்று. அப்படத்திற்கு பின்னர் சரவணன் நடிக்கவே மாட்டார் என கூறி வந்தனர். தன்னை கிண்டலடித்தவர்களை வாயடைக்க செய்யும் விதமாக தற்போது லீடர் என்கிற மாஸ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன். அப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் ஷியாம், ஆண்ட்ரியா, லால், பாயல் ராஜ்புட் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. அதன் எக்ஸ் தள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
லீடர் படத்தின் கதை
தூத்துக்குடி துறைமுகத்தை பின்னணியாக கொண்ட ஒரு வழக்கமான கேங்ஸ்டர் ஆக்ஷன் கதையாக லீடர் படம் உருவாகியுள்ளது. கார் மெக்கானிக் ஆக இருக்கும் நாயகன், தூத்துக்குடி துறைமுகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு ரவுடி கும்பலிடம் வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கும் வில்லனுக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. நாயகன் யார்? எதற்காக ரவுடி கும்பலின் கீழ் வேலை செய்கிறான்? இந்த இவருக்குள் உள்ள முன்விரோதம் என்ன? என்பதை ஆக்ஷன் அதிரடி உடன் சொல்லி இருக்கும் படம் தான் லீடர்.
லீடர் ட்விட்டர் விமர்சனம்
படத்தின் மிகப்பெரிய பலமே ஜிப்ரானின் பின்னணி இசைதான். ஒவ்வொரு காட்சியையும் தன் இசையாலும் உழைப்பாலும் மெருகேற்றி உள்ளார். புரொடக்ஷன் தரம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவு ஓரளவுக்குத் திருப்திகரமாக அமைந்துள்ளது. பலமுறை பார்த்து சலித்த அதே உப்மா கதைக்களம். திரைக்கதையில் எந்த ஒரு புதுமையும் இல்லாதது பலவீனம். அண்ணாச்சியின் நடிப்பு சுமார் ரகம் தான். அவரது குரலில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்ற கதாபாத்திரங்கள் நடிப்பு கூட எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கதையில் எமோஷனல் காட்சிகள் பெரிதாக ஒட்டவில்லை.
லீடர் எப்படி இருக்கு?
பொறுமையாக தொடங்கும் இரண்டாம் பாதி, சிறிது நேரத்திற்கு பிறகு நல்லா சூடு பிடிக்கிறது. ரைட்டிங் சில இடங்களில் ரொம்ப நன்றாக இருக்கிறது. குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் சூப்பர். ஆனா, பல காட்சிகள் கொஞ்சம் அபத்தமாகவும் தெரிகிறது. கிளைமாக்ஸ் டிரெயின் சண்டை காட்சி மொரட்டு சம்பவம். கிளைமாக்ஸ் ட்விஸ்ட் பிளாஸ்ட் ஆக உள்ளது. லெஜண்டை விட இந்த படம் நல்லா இருக்கு. குறைகள் இருந்தாலும் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். பார்ட் 2 வேற இருக்கு என பதிவிட்டு உள்ளார்.
#Leader – Watchable ⭐️⭐️⭐️ (3/5)
நாயகன் யார்?
எதற்காக ரவுடி கும்பலின் கீழ் வேலை செய்கிறான்?
இந்த இவருக்குள் உள்ள முன்விரோதம் என்ன? என்பதைக் சுற்றியே கதை நகர்கிறது.
பொறாமையாக தொடங்கும் இரண்டாம் பாதி, pre-interval-க்கு பிறகு நல்லா சூடு பிடிக்கிறது 🔥🔥
ரைட்டிங் சில இடங்களில்… https://t.co/73VpKCd4Hnpic.twitter.com/eAX9QwKSXB— KUDALINGAM MUTHU (@KUDALINGAM49671) April 3, 2026
லீடர் எக்ஸ் தள விமர்சனம்
லெஜண்ட் சரவணன் நடித்த லீடர் படத்தில், லெஜண்ட் ஒரு நடிகராக மெருகேறி இருக்கிறார். படத்தின் முதல் பாதி அருமை. ஆக்ஷன் நிறைந்த இரண்டாம் பாதிக்காக சரியான பிளாட் அமைத்திருக்கிறார்கள். துரை செந்தில்குமாரின் திரைக்கதை விறுவிறுப்பாக உள்ளது. ஆண்ட்ரியா, ஷியாம், லால் நடிப்பு நேர்த்தியாக உள்ளது. அனைவருக்குமே நல்ல ஸ்கிரீன் ஸ்பேஸ் மற்றும் கிளாப் அடிக்கும் காட்சிகள் படத்தில் இருக்கின்றன. படத்தில் உள்ள சர்ப்ரைஸ்களை ஸ்பாயில் பண்ண விரும்பவில்லை என குறிப்பிட்டு உள்ளார்.
#Leader starring @yoursthelegend
Legend improved as an actor
First half 👌👌
Plot is set for an action packed second half
Durai Senthilkumar screenplay is interesting
Sham Lal Andrea 👍
Screen space and clap worthy moments for all
Don't want to spoil the surprises pic.twitter.com/KH1ih6S1pK— Vinu ITV (@urfriendvinuITV) April 3, 2026

