Johnny Depp :பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து சித்ரவதை... பிரபல நடிகர் மீது மாஜி மனைவி பகீர் குற்றச்சாட்டு

Johnny Depp : திருமணம் செய்யும் வரை தானும் ஜானி டீப் மீது நன்மதிப்பை வைத்திருந்ததாகவும், பின்னர் அவை அனைத்தும் பொய்த்துப் போனதாகவும் ஆம்பர் தெரிவித்துள்ளார். 

Amber Heard accuses Johnny Depp of sexual abuse

ஹாலிவுட்டில் பிரம்மாண்ட வெற்றியை ருசித்த ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானவர் ஜானி டீப். கடந்த 1985-ம் ஆண்டே முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஆம்பர் ஹியர்டு என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். சுமார் 2 ஆண்டுகள் மட்டுமே இவர்களது திருமண வாழ்க்கை நீடித்தது. 2017-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஜானி டீப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆம்பர் ஹியர்டு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆம்பர் ஹியர்டு அளித்த தகவல்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Amber Heard accuses Johnny Depp of sexual abuse

நடிகர் ஜானி டீப்புடன் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த போது, அவர் தன்னை பல முறை அடித்து கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றபோது ஓவராக மது அருந்திவிட்டு குடிபோதையில் இருந்த ஜானி டீப், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆம்பர் கூறியுள்ளார்.

மதுபான பாட்டிலை பிறப்புறுப்பில் திணித்து, தன்னை பாலியல் ரீதியாக ஜானி டீப் சித்ரவதை செய்ததாகவும், அதனால் தனது பிறப்புறுப்பு கடுமையான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தனக்கு நடந்த துயரத்தை கண்ணீருடன் விவரித்தார் ஆம்பர் ஹியர்டு.

Amber Heard accuses Johnny Depp of sexual abuse

நடிகர் ஜானி டீப் பொதுவெளியில் தன்னை நல்லவர் போல அடையாளப்படுத்திக் கொள்வதாகவும், அவரின் சுயரூபம் இதுதான் என்றும் கடுமையாக சாடி உள்ளார் ஆம்பர். திருமணம் செய்யும் வரை தானும் ஜானி டீப் மீது நன்மதிப்பை வைத்திருந்ததாகவும், பின்னர் அவை அனைத்தும் பொய்த்துப் போனதாகவும் ஆம்பர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரிவித்துள்ள ஜானி டீப் தரப்பு வழக்கறிஞர், அவர் விளம்பரத்திற்காக இவ்வாறு பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... Pooja Hegde : அடுத்தடுத்து 2 படங்கள் பிளாப்... ராசியில்லாத நடிகையான பூஜா ஹெக்டே - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios