Pooja Hegde : அடுத்தடுத்து 2 படங்கள் பிளாப்... ராசியில்லாத நடிகையான பூஜா ஹெக்டே - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Pooja Hegde : அடுத்தடுத்து 2 படங்கள் தோல்வியடைந்ததால் நடிகை பூஜா ஹெக்டேவின் மார்க்கெட் கடும் சரிவை சந்தித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான முகமூடி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. இப்படம் பிளாப் ஆனதால் கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு டோலிவுட் பக்கம் ஒதுங்கினார் பூஜா ஹெக்டே.

டோலிவுட்டில் அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்ததால், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பாப்புலர் ஆனார் பூஜா ஹெக்டே. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற பூஜா ஹெக்டே அங்கு சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார். இதனால் அவரது மார்க்கெட்டும் பன்மடங்கு உயர்ந்தது.
இதையடுத்து நடிகை பூஜா ஹெக்டேவுக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதன்படி தெலுங்கில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான ராதே ஷ்யாம் மற்றும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் ஆகிய படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆனார் பூஜா ஹெக்டே.
இந்த இரண்டு படங்கள் மூலம் தனது மார்க்கெட் எகிறப் போகிறது என எதிர்பார்த்து காத்திருந்த நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ராதே ஷ்யாம் மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. இதில் ராதே ஷ்யாம் படம் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தது.
அதேபோல் அண்மையில் வெளியான பீஸ்ட் படமும் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு இணையாக டான்ஸில் மட்டும் கலக்கி உள்ள பூஜா ஹெக்டே, நடிப்பில் டம்மியாக உள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அடுத்தடுத்து 2 படங்கள் தோல்வியடைந்ததால் நடிகை பூஜா ஹெக்டேவின் மார்க்கெட் கடும் சரிவை சந்தித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... Actress Simran : மிஸ் யூ மோனு.... தற்கொலை செய்துகொண்ட தங்கை குறித்து நடிகை சிம்ரன் உருக்கம்