- Home
- Cinema
- Yash : ரசிகர்கள் நலனுக்காக... கோடி ரூபாய் சம்பளத்துடன் வந்த வாய்ப்பை தூக்கி எறிந்து மாஸ் காட்டிய ‘ராக்கி பாய்’
Yash : ரசிகர்கள் நலனுக்காக... கோடி ரூபாய் சம்பளத்துடன் வந்த வாய்ப்பை தூக்கி எறிந்து மாஸ் காட்டிய ‘ராக்கி பாய்’
Yash : சமீபத்தில் பல கோடி ரூபாய் சம்பளத்துடன் ஒரு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகர் யாஷுக்கு வந்துள்ளது. ஆனால் அந்த விளம்பரத்தில் நடிக்க அவர் மறுத்திவிட்டாராம்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் அண்மையில் வெளியானது. முதல் பாகத்தை விட மிக பிரம்மாண்டமாக தயாராகி இருந்த இப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது.
உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் வெளியான 15 நாட்களில் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 4வது படம் இதுவாகும், இதற்கு முன் அமீர் கானின் டங்கல், ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய 3 படங்கள் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தது.
படங்களில் நாயகனாக நடிக்கும் யாஷ், அவ்வப்போது விளம்பரங்களிலும் தோன்றி வருகிறார். இவருக்கு சமீபத்தில் பல கோடி ரூபாய் சம்பளத்துடன் ஒரு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அந்த விளம்பரத்தில் நடிக்க நடிகர் யாஷ் மறுத்திவிட்டாராம். ஏனெனில் அது புகையிலை விளம்பரமாம். ரசிகர்கள் நலன் கருதி அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
நடிகர் யாஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதேபோல் அண்மையில் நடிகர் அல்லு அர்ஜுனும் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருந்தார். அந்த விளம்பரத்தில் நடிக்க ரூ.6 கோடி சம்பளமாக கொடுப்பதாக கூறியும் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.... கல்லா கட்டும் காத்துவாக்குல ரெண்டு காதல்! தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து கேக்வெட்டி கொண்டாடிய நயன்தாரா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.