- Home
- Cinema
- கல்லா கட்டும் காத்துவாக்குல ரெண்டு காதல்! தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து கேக்வெட்டி கொண்டாடிய நயன்தாரா
கல்லா கட்டும் காத்துவாக்குல ரெண்டு காதல்! தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து கேக்வெட்டி கொண்டாடிய நயன்தாரா
kaathuvaakula rendu kaadhal : காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால் உற்சாகமடைந்த படக்குழு, நேற்று சென்னையில் உள்ள தேவி தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்திருந்தனர். இதில் விஜய் சேதுபதி ரேம்போவாகவும், நயன்தாரா கண்மணியாகவும், சமந்தா கதிஜாவாகவும் நடித்திருந்தனர்.
முக்கோண காதல் கதையம்சத்துடன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக கடந்த ஏப்ரல் 28-ந் தேதி வெளியாகி இருந்த இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்து வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக இப்படம் அமைந்தது.
இப்படம் தமிழகத்தில் மட்டும் 3 நாட்களில் 17 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால் உற்சாகமடைந்த படக்குழு, நேற்று சென்னையில் உள்ள தேவி தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
நடிகை, நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்து ரசித்தனர். மேலும் அங்கு இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மூவரும் கேக் வெட்டி மகிழ்ந்தனர். இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Gayathri Reddy :ரகசியமாக நடந்து முடிந்த பிகில் பட நடிகையின் நிச்சயதார்த்தம்! போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.