- Home
- Cinema
- கே.ஜி.எஃப் 2-வில் ராக்கி பாயை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரவீனாவா இது... வைரலாகும் மாடர்ன் லுக் போட்டோஸ்
கே.ஜி.எஃப் 2-வில் ராக்கி பாயை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரவீனாவா இது... வைரலாகும் மாடர்ன் லுக் போட்டோஸ்
பிரசாந்த் நீல் இயக்கிய கே.ஜி.எஃப் திரைப்படத்தில் சேலை அணிந்து கம்பீர நடைபோட்டு வந்த ரவீனா, தற்போது மும்பையில் மாடர்ன் லுக்கில் வலம் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

90-களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரவீனா டண்டன். அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளிவந்த ஆளவந்தான் படத்தில் ரவீனா டண்டன் தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இவர் தமிழ், இந்தி மட்டுமின்றி தெலுங்கு, பெங்காலி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரமிகா சென் என்கிற துணிச்சல் மிகுந்த பெண் வேடத்தில் நாட்டின் பிரதமராக நடித்திருந்தார் ரவீனா.
இதையும் படியுங்கள்... ஒரே ஜாலி தான்.. கையில் கேமரா உடன் பிளைட்டிற்குள் வலம் வந்த விஜய் - கலகலப்பான ‘தளபதி 67’ காஷ்மீர் டிரிப் வீடியோ
இந்திரா காந்தியை பிரதீபலிக்கும் விதமாக ரவீனா டண்டன் நடித்த ரமிகா சென் கதாபாத்திரத்தை வடிவமைத்து இருந்தார் பிரசாந்த் நீல். கே.ஜி.எஃப் படத்தின் தூணாக இருக்கும் ராக்கி பாயின் சாம்ராஜ்ஜியம் மொத்தத்தையும் தவிடுபொடி ஆக்கும் பவர்புல்லான கேரக்டரில் நடித்த ரவீனாவுக்கு பாரட்டுக்களும் குவிந்தன.
இந்நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் சேலை அணிந்து கம்பீர நடைபோட்டு வந்த ரவீனா, தற்போது மாடர்ன் லுக்கில் மும்பையில் வலம் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இவர் தான் கே.ஜி.எஃப் படத்தில் ரமிகா சென் ஆக நடித்தாரா என கேட்கும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாத அளவு டோட்டலாக மாறி இருக்கிறார் ரவீனா.
இதையும் படியுங்கள்... ரகசியமாக நடக்கும் திருமண ஏற்பாடுகள்..! கல்யாணத்திற்கு தயாரான ஷங்கர் பட நாயகி கியாரா அத்வானி!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.