நடிகர் விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்துள்ள தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழு காஷ்மீருக்கு விமானத்தில் சென்றபோது எடுத்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து, தற்போது அதே கூட்டணி ‘தளபதி 67’ படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் அப்டேட்டுக்காக கடந்த மூன்று மாதங்களாக ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், கடந்த ஒரு வாரமாக அப்டேட் மழை பொழிந்து வருகிறது படக்குழு.
திங்கட்கிழமை முதல் தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. முதலில் விஜய் - லோகேஷ் கனகராஜ் இருவரும் நேருக்கு நேர் நின்றபடி எடுத்த போட்டோவை வெளியிட்டு, படக்குழு குறித்த அறிக்கையையும் ரிலீஸ் செய்தனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அந்த அறிவிப்பில் சஞ்சய் தத், சாண்டி, பிரியா ஆனந்த், அர்ஜுன், கவுதம் மேனன், மேத்யூ, மன்சூர் அலிகான் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றன.
இதையும் படியுங்கள்... 'தளபதி 67' படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்!
இதையடுத்து புதன் கிழமை நடிகை திரிஷாவுக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவர் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதை உறுதிப்படுத்தினர். அதோடு நிற்காமல் அன்று மாலை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவையும் வெளியிட்டனர். இதன்பின்னர் வியாழக்கிழமை தளபதி 67 படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை நெட்பிளிக்ஸ் மற்றும் சன் டிவி கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி இன்று மாலை தளபதி 67 படத்தின் புரோமோ வீடியோ உடன் டைட்டில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. என்ன டைட்டிலாக இருக்கும் என படக்குழு குழம்பிப்போய் இருந்த நிலையில், தற்போது சர்ப்ரைஸாக மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். தளபதி 67 படக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு படக்குழுவினருடன் சென்றிருந்தனர். அப்போது விமானத்தில் எடுத்த வீடியோவை தான் வெளியிட்டு உள்ளனர். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் நடிகர் விஜய் திடீரென கேமராவை வாங்கி விமானத்தில் உள்ள அனைவரையும் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த காட்சிகளும் இதில் இடம்பெற்று உள்ளன.
இதையும் படியுங்கள்... அழகான ராட்சசியே... மெல்லிய சேலையில் மெருகேறிய அழகுடன் கியூட் போஸ் கொடுத்த திரிஷா - டிரெண்டாகும் போட்டோஸ்
